அம்பாறை மாவட்ட உள்ளூராட்சிமன்ற பெண்களின் திட்ட முன்மொழிவுகளுக்கான சிறு மானிய உதவி வழங்கும் ஒப்பந்தங்கள் கைச்சாத்து

🕔 August 27, 2023

ம்பாறை மாவட்ட உள்ளூராட்சிமன்ற பெண்களின் ‘வில் கிளப்’ (WILL Club) மற்றும் பலத்தரப்பட்ட பங்குதாரர்களுக்கு இடையிலான சந்திப்பு நேற்று சனிக்கிழமை அம்பாறையிலுள்ள தனியார் விடுதியொன்றில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் உள்ளூராட்சிமன்ற பெண்கள் எழுதிய திட்ட முன்மொழிவுகளின் இறுதி வடிவம், பலத்தரப்பட்ட பங்கு தாரர்கள் குழு முன்னிலையில் சமர்ப்பிக்க பட்டு அவற்றுக்கான சிறு மானிய உதவிகள் வழங்குவதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டதோடு, ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டன.

கல்முனை, திருக்கோவில், ஆலையடிவேம்பு, சம்மாந்துறை மற்றும் அம்பாறை ஆகிய 05 உள்ளூராட்சிமன்றங்களுக்கு இந்த வாய்ப்பு கிடைக்க பெற்றது.

இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட உள்ளூராட்சிமன்ற உதவி ஆணையாளர் கமல் நெத்மினி
அரச, அரச சார்பற்ற அமைப்புக்களின் உயர் அதிகாரிகள், சேர்ச் ஃபொர் கொமன் கிரவுன்ட் (Search for common ground) நிறுவனத்தின் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டுக்கான சிரேஷ்ட திட்ட முகாமையாளர் எம்.ஐ. முகம்மட் சதாத், இணைப்பாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், உள்ளூராட்சிமன்றங்களின் முன்னாள் பெண் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

சேர்ச் ஃபொர் கொமன் கிரவுன்ட் நிறுவனம் இந்த நிகழ்வுகளை ஒழுங்கமைத்து நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்