உலக சிறுவர் தினைத்தையொட்டி, கோமாரியில் மாணவர்களை பாராட்டிக் கௌரவித்த மக்கள் வங்கி பொத்துவில் கிளை

🕔 October 2, 2023

லக சிறுவர் தினத்தை சிறப்பிக்கும் வகையிலும், சிறுவர்களிடையே சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் பொருட்டும் – கோமாரி மெதடிஸ்த மிஷன் தமிழ் மகா வித்தியாலயத்தில் சிறுவர் தின கலை மற்றும் விளையாட்டுப் போட்டிகளைக் கொண்ட நிகழ்வு இன்று (02) இடம் பெற்றன.

மக்கள் வங்கியின் பொத்துவில் கிளை அனுசரணையில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு பாடசாலையைின் அதிபர் ரி. உதயகுமார் தலைமை தாங்கினார்.

மக்கள் வங்கியின் அம்பாறை பிராந்திய முகாமையாளர் திருமதி எம்.எம்.ஏ. அமரசிறி இந்நிகழ்வில் பிரதம அதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மக்கள் வங்கியின் பொத்துவில் கிளை வியாபார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.எம். நபீல் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் – கோமாரி மெதடிஸ்த மிஷன் தமிழ் மகா வித்தியாலயத்தில் சென்ற வருடம் க.பொ.த. உயர் தரப் பரீட்சை கலைப்பிரிவில் அனைத்துப் பாடங்களிலும் ‘ஏ’ தர சித்தி பெற்ற மாணவியும், கடந்த வருடம் 05ஆம் தரம் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களும் – மக்கள் வங்கியின் அம்பாறை மாவட்ட பிராந்திய முகாமையாளரால் பதங்கம், சான்றிதழ் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

‘உலக சிறுவர் தினத்தில் சேமிப்பினால் கற்றிடலாம்’ எனும் தொனிப்பொருளில், உலக சிறுவர் தினத்தின் நிமித்தம் மக்கள் வங்கியின் இசுரு உதான அல்லது சிசு உதான சேமிப்புக் கணக்கில் இவ்வருடம் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் – டிசம்பர் 31ஆம் திகதி வரை, பணத்தை வைப்புச் செய்யும் சிறுவர்கள் அனைவருக்கும் மக்கள் வங்கி – பரிசுகளை வழங்கி வழங்குகிறது.

அந்த அடிப்படையில் கோமாரி மெதடிஸ்த மிஷன் தமிழ் மகா வித்தியாலயத்தில் இன்று புதிய வங்கிக் கணக்குகளைத் திறந்த மற்றும் ஏலவே உள்ள கணக்குகளில் பண வைப்புச் செய்த சிறுவர்கள் அனைவருக்கும் மக்கள் வங்கியின் பொத்துவில் கிளை – பரிசுகளை வழங்கியது.

மேலும் பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கும் பரிசுப் பொருட்களை வழங்கி, மக்கள் வங்கியின் பொத்துவில் கிளை கௌரவித்தது.

இந்நிகழ்வில் மக்கள் வங்கியின் அம்பாறை பிராந்திய உதவி முகாமையாளர் எஸ்.எம். மோகனதாஸ், மக்கள் வங்கியின் பொத்துவில் கிளை முகாமையாளர் திருமதி எச்.பி.சி.சி. ராஜஹெவ, பிராந்திய வியாபார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜே.கே.டி. டிலினி தனுக்ஷா ரணுதுங்க மற்றும் பெற்றோர் உள்ளிட்டோர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்