‘இளைஞர் பரிசளிப்பு’ தேசிய போட்டிக்கு ஒலுவி்ல் சஹீம் தெரிவு

🕔 September 3, 2023

லுவில் பிரதேசத்தைச் சேர்ந்த எம்.ஐ.எம். சஹீம், இளைஞர் பரிசளிப்பு விழாவுக்கான ‘அபிநயம்’ போட்டியில் மாகாண ரீதியாக வெற்றி பெற்று , தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.

அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரதேசத்திலிருந்து, இளைஞர் பரிசளிப்பு விழாவுக்கான தேசிய மட்டப் போட்டியில் இம்முறை கலந்துகொள்ளும் ஒரே போட்டியாளர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

43ஆவது இளைஞர் பரிசளிப்பு விழாவுக்கான தேசிய மட்டப் போட்டிகள் – இம்மாதம் 26ம் திகதி மஹரகம தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் நடைபெற உள்ளது.

ஒலுவில் பிரதேசத்தைத் தளமாகக் கொண்டியங்கும் ‘கடல் பறவைகள்’ இலக்கிய அமைப்பில் இவர் செயற்பட்டு வருகின்றார்.

மும்மொழிகளிலும் கலை, இலக்கியத் துறையில் திறமையுள்ள இளைஞர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கும் ‘இளைஞர் பரிசளிப்பு விழா’வை, தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஒவ்வொரு வருடமும் நடத்தி வருகின்றது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்