கடலில் மூழ்கிய அட்டாளைச்சேனை மாணவன்: தகவல் அறிந்தோர் தொடர்பு கொள்ளுமாறு கோரிக்கை

🕔 October 3, 2023

லுவில் துறைமுகத்திற்கு அருகாமையில் நேற்று (02) நீராடச் சென்ற அட்டாளைச் சேனையை பிறப்பிடமாகக் கொண்ட தரம் 10 படிக்கும் இவர் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

இந்த நிலையில் இவர் சம்பந்தமான எந்தத் தகவல்களையும் பெற முடியாமல் உள்ளதாக குடும்பத்தார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை இவரை தேடும் பணியில் பல்வேறு தரப்பினரும் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது,

எனவே, மட்டக்களப்பு, அம்பாரை பிராந்திய கரையோர பிரதேசத்தைச் சேர்ந்தோர், இவர் சம்பந்தமான ஏதும் செய்திகளை அறிந்தால் தம்மைத் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு இவரின் குடும்பததினர் தயவாய் வேண்டுகின்றனர்.

தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கங்கள்: 0777881247 / 0768186952.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்