றமீஸ் அப்துல்லா: தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முதல் சிரேஷ்ட பேராசிரியரானார்

🕔 August 27, 2023

தென்கிழக்குப் பல்கலைக்கழக தலைமைப் பேராசிரியர் றமீஸ் அப்துல்லா, சிரேஷ்ட பேராசிரியராக பதவியுயர்வு பெற்றுள்ளார்.

பேராதனை பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை ஆரம்பித்த றமீஸ் அப்துல்லா, 1995ஆம் ஆண்டு தமிழ் சிறப்பு இளங்கலை பட்டதாரியானார்.

கற்கை முடிவில் பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் உதவி விரிவுரையாகக் கடமையாற்றும் வாய்ப்பும் அவருக்குக் கிடைத்தது.

அம்பாறை மாவட்டம் – சம்மாந்துறையை சேர்ந்த இவர், தென்கிழக்குப் பல்கலைக்கழத்தில் 1995ஆம் ஆண்டு விரிவுரையாளராக இணைந்தார்.

தனது முது தத்துவமாணிப் பட்டத்தை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பெற்றுக்கொண்ட றமீஸ் அப்துல்லா, பின்னர், பொதுசனத் தொடர்பாடல் துறையில் கலாநிதிப் பட்டத்தை – சிறி ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் 2010 இல் பெற்றார்.

இதனையடுத்து 2014ஆம் ஆண்டு பேராசிரியராக பதவி உயர்வு பெற்ற றமீஸ் அப்துல்லா, 2020ஆம் ஆண்டு தலைமைப் பேராசிரியராக (Chair Professor) உயர்ந்தார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மொழித்துறை தலைவர், இணைப்பாளர் போன்ற உயர் பதவிகளை வகித்துள்ள இவர், பல்கலைக்கழக ஊடகவியல்துறை டிப்ளோமா கற்கைநெறியின் இணைப்பாளராகவும் கடமையாற்றி வருகின்றார்.

றமீஸ் அப்துல்லா – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முதல் பேராசிரியர் என்பதோடு, முதலாவது சிரேஷ்ட பேராசிரியர் எனும் சிறப்பினையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் முதன்முறையாக கலைப்பீடத்தைச் சேர்ந்தோர் தலைமைப் பேராசிரியர்களாக நியமனம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்