கல்முனை உப பிரதேச செயலகத்தின் நிர்வாக துஷ்பிரயோகங்களுக்கு எதிராக ‘ரிட்’ மனு தாக்கல்

🕔 October 27, 2023

ல்முனை பிரதேச செயலகத்தின் கீழ் இயங்கிவரும் கல்முனை உப பிரதேச செயலகமானது சட்டவிரோதமாக மேற்கொண்டுவரும் அதிகார மற்றும் நிர்வாக துஷ்பிரயோகங்களுக்கு எதிராக ‘ரிட்’ எழுத்தானை மனுவொன்று நேற்று (26) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கல்முனை சிவில் அமைப்புக்களின் சம்மேளனத்தினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இவ்வழக்கில் ‘கல்முனையன்ஸ் போரம்’ அமைப்பின் தலைவர் முபாரிஸ் எம். ஹனீபா மனுதாராக குறிப்பிடப்பட்டுள்ளார்.

இம்மனுவில் கல்முனை உப பிரதேச செயலாளர் உட்பட பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர், அமைச்சின் செயலாளர், அம்பாறை மாவட்ட செயலாளர், கல்முனை பிரதேச செயலாளர், எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் உறுப்பினர்கள், காணி ஆணையாளர் நாயகம் மற்றும் சட்டமா அதிபர் உள்ளிட்டோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

அரசியலமைப்பின் உறுப்புரை 140 க்கு அமைய – உப பிரதேச செயலகமாக இருந்துகொண்டு, கல்முனை வடக்கு பிரதேச செயலகம் என்றும், கல்முனை தமிழ் பிரதேச செயலகம் என்றும் சட்ட விரோதமாக குறிப்பிட்டு – அதிகார துஷ்பிரயோகங்களையும், நிருவாக மோசடிகளையும் மேற்கொண்டுவருவதனை நிறுத்துமாறு கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்