இரத்த தான நிகழ்வு: அட்டாளைச்சேனையில் நாளை ஏற்பாடு

🕔 November 4, 2023

– கே. அப்துல் ஹமீட் –

ரத்ததான நிகழ்வொன்று நாளை 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அந்நூர் மகா வித்தியாலய மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

அட்டாளைச்சேனை அந்நூர் மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவில் ஏற்பட்டுள்ள குருதித் தட்டுப்பாட்டை நிவர்த்திக்கும் பொருட்டு – இந்த இரத்த தான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவினர் – அந்நூர் பழைய மாணவர் சங்கத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய, சங்கத்தின் செயலாளர் றிசாத் ஏ காதரின் ஒழுங்கமைப்பில் இவ் இரத்ததான நிகழ்வு இடம்பெறவுள்ளது.

குறித்த இரத்ததான நிகழ்வுக்கான அனுசணையினை அட்டாளைச்சேனை – 08 சனசமூக நிலையம் வழங்குகிறது.

குருதிக் கொடை வழங்க ஆர்வமுள்ளவர்கள் இதில் கலந்து கொண்டு, குருதிக்கொடை வழங்கி உயிர்காக்க உதவுமாறு வேண்டிக் கொள்ளப்படுகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்