சமூக விடயங்களில் சட்டப் பணியாற்றி வந்த ரத்தீப் அஹமட்: இள வயதில் நீதிபதியாகிறார்

🕔 November 27, 2023

– முன்ஸிப் அஹமட் –

மூக விடயங்களில் நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்காக, ஒரு சட்டத்தரணியாக நீண்ட காலம் உழைத்து வந்த அக்கரைப்பற்றைச் சேர்ந்த எம்.எஸ். ரத்தீப் அஹமட் – நீதிபதியாக எதிர்வரும் முதலாம் திகதி கடமையினைப் பொறுப்பேற்கவுள்ளார்.

நீதிபதி தேர்வில் அண்மையில் சித்தியடைந்த ரத்தீப் அஹமட், சட்டத்தரணியாகி 07 வருடங்களுக்குள் நீதிபதியாக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

33 வயதுடைய ரத்தீப் அஹமட் – சட்டத்துறையில் இரண்டு முதுமாணிப் பட்டங்களைப் பெற்றுள்ளார்.

‘குற்றவியல் நீதி நிர்வாகம்’, மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகமயமாக்கல் ஆகிய பிரிவுகளில் அவர் முதுமாணிப் பட்டங்களைப் பெற்றுள்ளார்.

சட்டத்துறைக்கு அப்பால் – கணக்கியல் துறையிலும் இவர் பல தகைமைகளைக் கொண்டுள்ளமை கவனத்துக்குரியது.

எழுத்துத் துறையில் ஈடுபாடுள்ள ரத்தீப் அஹமட் – தனது இளவயதில் ‘துறவறம்’ எனும் நூலொன்றையும் எழுதி வெளியிட்டுள்ளார்.

சமூகம் சார்ந்த விடயங்களில், இவர் – பல்வேறு இலவச சட்ட உதவிகளை வழங்கி வந்துள்ளதோடு, ஒரு சட்டத்தரணியாக நீதிமன்றங்களில் இலவசமாக ஆஜராகி – பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்காகவும் உழைத்துள்ளார்.

இவர், ஓய்வுபெற்ற இலங்கை வங்கி முகாமையாளர் மீராசாஹிப் – உம்மு ஹபீபா ஆகியோரின் மூத்த மகனாவார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்