Back to homepage

அம்பாறை

தொல்பொருள் விவகாரத்தை அரசியல்வாதிகளும், பௌத்த மதகுருமாரும் கையில் எடுக்க முடியாது: உதுமாலெப்பை

தொல்பொருள் விவகாரத்தை அரசியல்வாதிகளும், பௌத்த மதகுருமாரும் கையில் எடுக்க முடியாது: உதுமாலெப்பை 0

🕔30.Dec 2016

– எம்.ஜே.எம். சஜீத் –தொல்பொருள் இடங்களைப் பாதுகாக்கப் போகின்றோம் எனக்கூறிக்கொண்டு, அம்பாரை மாவட்டத்தில் முஸ்லிம் மற்றும் தமிழ் பிரதேசங்களில் வாழும் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி நல்லாட்சி அரசாங்கத்திற்கு களங்கம் ஏற்படுத்த வேண்டாமென, கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவரும், அம்பாரை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவருமான எம்.எஸ் உதுமாலெப்பை தெரிவித்தார்.அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம் அமைச்சர் தயா கமகே,

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டப்படிப்பை ஆரம்பிக்க முடியும்: உபவேந்தர் நாஜிம்

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டப்படிப்பை ஆரம்பிக்க முடியும்: உபவேந்தர் நாஜிம் 0

🕔29.Dec 2016

– எம்.வை. அமீர் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடமானது 2017  ஆம் ஆண்டில் முதுமானி மற்றும் கலாநிதி பட்டப் படிப்புகளை ஆரம்பிக்க முடியும் என்று அந்தப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் தெரிவித்தார். அவ்வாறான பட்டப்படிப்புகளை ஆரம்பிப்பதற்கான வேலைத்திட்டங்களை, சம்பந்தப்பட்ட பீடம் தயாரித்து வழங்கினால், அதற்குரிய முழு ஒத்துழைப்புக்களையும் தான் வழங்கவுள்ளதாகவும் அவர்

மேலும்...
நூல் வெளியீட்டு நிகழ்வில், வைத்திய அத்தியட்சகர் நக்பருக்கு கௌரவம்

நூல் வெளியீட்டு நிகழ்வில், வைத்திய அத்தியட்சகர் நக்பருக்கு கௌரவம் 0

🕔28.Dec 2016

– றிசாத் ஏ காதர் – அட்டாளைச்சேனை ஆயர்வேத தள வைத்தியசாலையின் ‘ஆரோக்கிய வாழ்வு’ நூல் வெளியீடும், வைத்தியசாலையின் பெயர்ப் பலகை திரைநீக்கும் நிகழ்வும் வைத்தியசாலை அத்தியட்சகர் டொக்டர் கே.எல். நக்பர் தலைமையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை நடைபெற்றன. மத்திய மருந்தகமாக ஆரமப்பிக்கப்பட்ட இவ்வைத்தியசாலை, மாவட்ட வைத்தியசாலையாக நீண்டகாலம் இயங்கியது. இந்த நிலையில், தள வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ளது. இவ் வைத்தியசாலையின்

மேலும்...
நன்மைகளைத் தேடிட ஒரு சந்தர்ப்பம்: குழந்தைக்கு உதவுங்கள்

நன்மைகளைத் தேடிட ஒரு சந்தர்ப்பம்: குழந்தைக்கு உதவுங்கள் 0

🕔26.Dec 2016

– முஹம்மட் சியான் – அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஆப்டீன் என்பவரின் 05 வயதுடைய  முஹம்மட் ஆதீப் எனும் குழந்தை, இரண்டு சிறுநீரகங்களும் (Renal Failure) பாதிப்படைந்து  பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இலக்கம் 363 மத்திய  வீதி அக்கரைப்பற்று  06 இல், ஆப்டீன் வசித்து வருகின்றார்.குழுந்தையைப் பரிசோதித்த வைத்தியர்கள், அவசரமாக சத்திர சிகிச்சை மேற்கொள்ளுமாறும், அதற்கு 15 லட்சம் தேவைப்படுவதாகவும் மதிப்பிட்டுள்ளார்கள்.அன்றாட கூலித்தொழில் செய்யும்

மேலும்...
றியாஸ் எழுதிய புத்தக வெளியீடு; கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜவாத் பிரதம அதிதி

றியாஸ் எழுதிய புத்தக வெளியீடு; கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜவாத் பிரதம அதிதி 0

🕔26.Dec 2016

– எம்.வை. அமீர் – சமாதான கற்கைகள் நிலையத்தின் பணிப்பாளர், கலாநிதி. எஸ்.எல். றியாஸ் எழுதிய “Interview  Techniques and Skills”  எனும் புத்தகத்தின் மீள்வெளியீடு கல்முனை ஆஸாத் பிளாஷா வரவேற்பு மண்டபத்தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இடம்பெற்றது. தென்கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் எச்.எம். நிஜாம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும், மு.காங்கிரஸ்

மேலும்...
ஒலுவில் மீன்பிடி துறைமுகம்: அரசாங்கம் நிதி ஒதுக்கியும், தீர்வு கிட்டவில்லை என மீனவர்கள் விசனம்

ஒலுவில் மீன்பிடி துறைமுகம்: அரசாங்கம் நிதி ஒதுக்கியும், தீர்வு கிட்டவில்லை என மீனவர்கள் விசனம் 0

🕔25.Dec 2016

– முன்ஸிப் அஹமட், படங்கள்: றிசாத் ஏ காதர் – ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தின் படகுப் பாதையினை மூடியுள்ள மண்ணை அகற்றும் பொருட்டு, இலங்கை மீன்பிடி துறைமுகக் கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான சயுறு எனும் கப்பல், ஒலுவில் துறைமுகத்துக்கு வருகை தந்துள்ளதோடு, அதன் பணிகளையும் ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில், படகுப் பாதையினை மூடியுள்ள மண்ணை அகற்றுவதில், சம்பந்தப்பட்ட

மேலும்...
டெங்கு ஒழிப்பு பிரிவின் முக்கியஸ்தர் வீட்டில், நுளம்பு பெருகும் இடங்கள் கண்டுபிடிப்பு

டெங்கு ஒழிப்பு பிரிவின் முக்கியஸ்தர் வீட்டில், நுளம்பு பெருகும் இடங்கள் கண்டுபிடிப்பு 0

🕔25.Dec 2016

– யூ.கே. காலித்தீன் – கல்முனை பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்துக்குட்பட்ட பகுதியில், டெங்கு ஒழிப்பு விசேட செயலணியில், பொறுப்புவாய்ந்த பதவியில் கடமையாற்றும் முக்கியஸ்தர் ஒருவரின் வீட்டில் – நுளம்புகள் பெருக்கக்கூடிய இடங்கள் கண்டறியப்பட்டன. குறித்த அதிகாரியின் வீட்டுச்சூழலில் நுளம்புகள் பெருக்கக்கூடிய இடங்கள் உள்ளதாக, குறித்த பிரிவு கிராம சேவை உத்தியோகத்தருக்கு அயலவர்கள் முறைப்பாடு செய்திருந்தனர். இதன்

மேலும்...
டொக்டர் நஜிமுத்தீனின் கவிதை நூல் வெளியீடு

டொக்டர் நஜிமுத்தீனின் கவிதை நூல் வெளியீடு 0

🕔25.Dec 2016

– எம்.வை. அமீர், யூ.கே. காலிதீன்- சாய்ந்தமருதைச் சேர்ந்த டொக்டர் எஸ். நஜிமுதீன் எழுதிய ‘இமைகள் மூடாதிருக்கும்’ எனும் கவிதைத்தொகுதி வெளியீட்டு விழா சாய்ந்தமருது சீ பிரீஸ் வரவேற்பு மண்டபத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. ஏ.பீர்முஹம்மட் தலைமையில்,  லக்ஸ்டோ ஊடக வலையமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி நூறுல் மைமூனா பிரதம அதிதியாக

மேலும்...
அழிந்து வரும் இலுக்குச்சேனை சுகாதார நிலையம்; அதிகாரிகளின் பொடுபோக்கினால், மக்கள் அவதி

அழிந்து வரும் இலுக்குச்சேனை சுகாதார நிலையம்; அதிகாரிகளின் பொடுபோக்கினால், மக்கள் அவதி 0

🕔17.Dec 2016

– முன்ஸிப் அஹமட், படங்கள்: றிசாத் ஏ காதர் – மக்களின் தேவைகளை நிறைவு செய்து கொடுக்கும் வகையில், பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்ற நிலையில், கிடைத்த வளங்களை பயன்படுத்தாமல், அழிந்து போக விடுவது, பொறுப்புணர்வின்மையின் வெளிப்பாடாகும். அக்கரைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட இலுக்குச்சேனை கிராமத்தில், பல லட்சம் ரூபாய் பெறுமதியில் அமையப்பெற்றுள்ள

மேலும்...
முஸ்லிம்களை தீகவாபியில் வைத்து தாக்கியவர்களுக்கு விளக்க மறியல்

முஸ்லிம்களை தீகவாபியில் வைத்து தாக்கியவர்களுக்கு விளக்க மறியல் 0

🕔14.Dec 2016

– அப்துல்லாஹ் இப்னு  அன்சார் –முஸ்லிம்களை தீக்கவாபியில் வைத்துத் தாக்கிய இரண்டு நபர்களை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிபதி நளினி கந்தசாமி இன்று வியாழ உத்தரவிட்டார்.தீகவாயில் கடந்த 02ஆம் திகதி முஸ்லிம்களை தாக்கிய சம்பவம் தொடர்பில் தமண பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இரு சிங்களவர்கள் இன்றைய தினம் நீதிமன்றத்தில்

மேலும்...
மு.காங்கிரசின் பொறுப்புவாய்ந்த செயலாளராக ஹசனலிதான் இருக்க வேண்டும்: கட்சியின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தர்கள் தெரிவிப்பு

மு.காங்கிரசின் பொறுப்புவாய்ந்த செயலாளராக ஹசனலிதான் இருக்க வேண்டும்: கட்சியின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தர்கள் தெரிவிப்பு 0

🕔13.Dec 2016

– முன்ஸிப் அஹமட் – முஸ்லிம் காங்கிரசின் பொறுப்புவாய்ந்த செயலாளராக அந்தக் கட்சியின் மூத்த நபர்களில் ஒருவரான எம்.ரி. ஹசனிதான் பதவி வகிக்க வேண்டுமென, கட்சியின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தர்கள் ஒருமித்த குரலில் தெரிவித்துள்ளனர். எம்.ரி. ஹசனலிக்கும், மு.காங்கிரசின் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த உயர்பீட அங்கத்தவர்கள்,  அந்தக் கட்சியின் முன்னாள் உள்ளுராட்சி மன்ற தலைவர்கள் மற்றும்

மேலும்...
வகுப்புத் தடையை நீக்கக்கோரி, தென்கிழக்கு பல்லைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம்

வகுப்புத் தடையை நீக்கக்கோரி, தென்கிழக்கு பல்லைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம் 0

🕔8.Dec 2016

– முன்ஸிப் அஹமட், படங்கள்: றிசாத் ஏ காதர் – தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் சிலருக்கு நிருவாகத்தினர் விதித்துள்ள வகுப்புத்தடையினை நீக்குமாறு கோரிக்கை விடுத்து, பல்கலைக்கழகத்தின் ஒரு தொகுதி மாணவர்கள் இன்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்ட நடவடிக்கையொன்றில் ஈடுபட்டனர். ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நிருவாகக் கட்டடத்தின் முகப்பு வாயிலில் ஒன்று கூடிய மாணவர்கள், பல்கலைக்கழக நிருவாகம் –

மேலும்...
அட்டாளைச்சேனையில் முறைகேடாக வடிகான் நிர்மாணம்; உடனடியாக நிறுத்துமாறு பணிப்பு

அட்டாளைச்சேனையில் முறைகேடாக வடிகான் நிர்மாணம்; உடனடியாக நிறுத்துமாறு பணிப்பு 0

🕔7.Dec 2016

– எம்.ஜே.எம். சஜீத் – அட்டாளைச்சேனை- 03 சந்தை வீதி வடிகான் நிர்மாண வேலைகள் முறைகேடாக மேற்கொள்ளப்படுவதாக, பொதுமக்களால் முறையிடப்படுகின்றமையினை அடுத்து, அவ்விடத்துக்கு கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவரும், அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமான எம்.எஸ். உதுமாலெப்பை இன்று புதன்கிழமை திடீர் விஜயம் மேற்கொண்டு வடிகான் நிர்மாணப்பனிகளைப் பார்வையிட்டார். கிராமத்துக்கு ஒரு வேலைத் திட்டத்தினூடாக இந்த

மேலும்...
அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்கான கோட்டக் கல்வி அதிகாரிகள் நியமனம், திட்டமிட்டு இழுத்தடிப்பு

அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்கான கோட்டக் கல்வி அதிகாரிகள் நியமனம், திட்டமிட்டு இழுத்தடிப்பு 0

🕔6.Dec 2016

– அஹமட் – அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்குட்பட்ட பொத்துவில், அக்கரைப்பற்று மற்றும் அட்டாளைச்சேனை கோட்டங்களுக்கான கோட்டக்கல்வி அதிகாரிகள் நியமனம், நீண்டகாலமாக இழுத்தடிப்புச் செய்யப்பட்டுவருவதாக குற்றம் சாட்டப்படுகிறது. மேற்படி, கோட்டங்களுக்கு தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்ட அதிகாரிகளே, நீண்டகாலமாக பணியாற்றி வருகின்றனர். இந்த விடயம் கிழக்கு மாகாண கல்வி அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து, இவ் வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள்

மேலும்...
அக்கரைப்பற்றில் மேற்கொள்ளப்படும் கட்டட நிர்மாணத்தை நிறுத்துமாறு, நீதிமன்றம் உத்தரவு

அக்கரைப்பற்றில் மேற்கொள்ளப்படும் கட்டட நிர்மாணத்தை நிறுத்துமாறு, நீதிமன்றம் உத்தரவு 0

🕔5.Dec 2016

– முன்ஸிப் அஹமட் – அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டட நிர்மாண நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு கல்முனையில் அமைந்துள்ள மாகாண மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அக்கரைப்பற்று பிரதான வீதியோரமாக, ரெலிகொம் காரியாலயத்துக்கு அருகாமையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டட நிர்மாண நடவடிக்கைகளையே இவ்வாறு நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த வகையில், EP/HCK/Writ/186/2016 எனும் இலக்கத்தினைக் கொண்ட வழக்கு முடியும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்