நன்மைகளைத் தேடிட ஒரு சந்தர்ப்பம்: குழந்தைக்கு உதவுங்கள்

🕔 December 26, 2016
donation-022– முஹம்மட் சியான் – 

க்கரைப்பற்றைச் சேர்ந்த ஆப்டீன் என்பவரின் 05 வயதுடைய  முஹம்மட் ஆதீப் எனும் குழந்தை, இரண்டு சிறுநீரகங்களும் (Renal Failure) பாதிப்படைந்து  பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இலக்கம் 363 மத்திய  வீதி அக்கரைப்பற்று  06 இல், ஆப்டீன் வசித்து வருகின்றார்.

குழுந்தையைப் பரிசோதித்த வைத்தியர்கள், அவசரமாக சத்திர சிகிச்சை மேற்கொள்ளுமாறும், அதற்கு 15 லட்சம் தேவைப்படுவதாகவும் மதிப்பிட்டுள்ளார்கள்.

அன்றாட கூலித்தொழில் செய்யும் மேற்படி சகோதரரால், இவ்வாறானதொரு பெரும் தொகையை திரட்ட முடியாத நிலையில், பொது மக்களிடம் உதவியை நாடி உள்ளார்.

ஆகவே உங்களால் முடிந்த உதவியை செய்து, குழந்தையின் சத்திர சிகிச்சைக்கு உதவுமாறு குழந்தையின் தந்தை வேண்டுகோள் விடுக்கின்றார்.

மேலதிக தகவல்களுக்கு 0778961201 (ஹமீதா  உம்மா ) அழைப்புகளை மேற்கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

பணம் அனுப்புவதற்கு
MSN . HAMEETHA UMMA
AC/ BANK OF CEYLON ( BOC )
AKKARAIPATTU BRANCE
AC  8261379

தொடர்புகளுக்கு
MSN . HAMEETHA UMMA
363  CENTRAL ROAD
AKKARAIPATTU-06
TEL : 0778961201donation-011

Comments