டெங்கு ஒழிப்பு பிரிவின் முக்கியஸ்தர் வீட்டில், நுளம்பு பெருகும் இடங்கள் கண்டுபிடிப்பு
🕔 December 25, 2016


– யூ.கே. காலித்தீன் –
கல்முனை பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்துக்குட்பட்ட பகுதியில், டெங்கு ஒழிப்பு விசேட செயலணியில், பொறுப்புவாய்ந்த பதவியில் கடமையாற்றும் முக்கியஸ்தர் ஒருவரின் வீட்டில் – நுளம்புகள் பெருக்கக்கூடிய இடங்கள் கண்டறியப்பட்டன.
குறித்த அதிகாரியின் வீட்டுச்சூழலில் நுளம்புகள் பெருக்கக்கூடிய இடங்கள் உள்ளதாக, குறித்த பிரிவு கிராம சேவை உத்தியோகத்தருக்கு அயலவர்கள் முறைப்பாடு செய்திருந்தனர். இதன் அடிப்படையில் இடம்பெற்ற திடீர் சுற்றிவளைப்பின்போதே இவ்விடங்கள் கண்டறியப்பட்டன.
இதனையடுத்து உடனடியாக கல்முனை பிராந்திய பூச்சியியல் நிபுணர்கள் ஸ்தலத்துக்கு வரவழைக்கப்பட்டதுடன், தேங்கிக் காணப்பட்ட நீரும் அதனுள் காணப்பட்ட பதார்த்தங்களும் பரிசோதனைக்காக பூச்சியியல் நிபுணர்களால் எடுத்துச்செல்லப்பட்டன.

Comments

