அட்டாளைச்சேனையில் முறைகேடாக வடிகான் நிர்மாணம்; உடனடியாக நிறுத்துமாறு பணிப்பு

🕔 December 7, 2016

uthumalebbe-drainage-011– எம்.ஜே.எம். சஜீத் –

ட்டாளைச்சேனை- 03 சந்தை வீதி வடிகான் நிர்மாண வேலைகள் முறைகேடாக மேற்கொள்ளப்படுவதாக, பொதுமக்களால் முறையிடப்படுகின்றமையினை அடுத்து, அவ்விடத்துக்கு கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவரும், அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமான எம்.எஸ். உதுமாலெப்பை இன்று புதன்கிழமை திடீர் விஜயம் மேற்கொண்டு வடிகான் நிர்மாணப்பனிகளைப் பார்வையிட்டார்.

கிராமத்துக்கு ஒரு வேலைத் திட்டத்தினூடாக இந்த வடிகான் நிர்மாண வேலைகள் இடம்பெற்று வருகின்றன.

எதிர்கட்சித் தலைவரின் இந்த திடீர் விஜயத்தின்போது, அட்டாளைச்சேனை உதவிப் பிரதேச செயலாளர் ரீ. அதிசயராஜ் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் சிலரும் வருகை தந்திருந்தனர்.

குறித்த வீதியில் நிர்மாணிக்கப்படும் வடிகான் – முறைகேடாக நிர்மாணிக்கப்படுவதாகவும், வடிகான் அமைப்பதற்காக வெட்டப்பட்ட குழியினுள் நீர் தேங்கி நிற்கும் நிலையில், நிர்மாண வேலைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் இதன்போது பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

இவ்விடயத்தினைக் கவனத்திற்கொண்ட கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவரும், அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவருமான எம்.எஸ். உதுமாலெப்பை, குழியினுள் நீர் நிரம்பிக் காணப்படும் நிலையில் மேற்கொள்ளப்படும் இவ்வடிகான் நிர்மாண வேலைகளை உடனடியாக நிறுத்துமாறும், இது தொடர்பில் சிரேஷ்ட பொறியியலாளர்களின் ஆலோசனைகளைப் பெற்று சிறந்த முறையில் மேற்கொள்ளுமாறும் பணிப்புரை விடுத்தார்.uthumalebbe-drainage-033 uthumalebbe-drainage-022

Comments

புதிது பேஸ்புக் பக்கம்