டொக்டர் நஜிமுத்தீனின் கவிதை நூல் வெளியீடு

🕔 December 25, 2016

book-release-09– எம்.வை. அமீர், யூ.கே. காலிதீன்-

சாய்ந்தமருதைச் சேர்ந்த டொக்டர் எஸ். நஜிமுதீன் எழுதிய ‘இமைகள் மூடாதிருக்கும்’ எனும் கவிதைத்தொகுதி வெளியீட்டு விழா சாய்ந்தமருது சீ பிரீஸ் வரவேற்பு மண்டபத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

ஏ.பீர்முஹம்மட் தலைமையில்,  லக்ஸ்டோ ஊடக வலையமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி நூறுல் மைமூனா பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

தென்கிழக்கு பல்கலைக்கழக தமிழ்த்துறை பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ், கவிஞர் நவாஸ் சௌபி, கவிஞர் பாலமுனை முஹா மற்றும் கவிஞர் தீரன் ஆர்.எம். நௌஷாட் ஆகியோரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினர்.

நூலின் முதற் பிரதியை தொழிலதிபர் எம்.எச்.எம். இப்ராஹிம் பெற்றுக்கொண்ட அதேவேளை முதன்மைப்பிரதிகளை  வைத்திய கலாநிதி சஹிலா இஸ்ஸடீன் மற்றும் எழுத்தாளர் அதிபர் எம்.எல்.ஏ.எம். கையூம் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.book-release-08

Comments

புதிது பேஸ்புக் பக்கம்