அழிந்து வரும் இலுக்குச்சேனை சுகாதார நிலையம்; அதிகாரிகளின் பொடுபோக்கினால், மக்கள் அவதி

🕔 December 17, 2016

– முன்ஸிப் அஹமட், படங்கள்: றிசாத் ஏ காதர் –

க்களின் தேவைகளை நிறைவு செய்து கொடுக்கும் வகையில், பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்ற நிலையில், கிடைத்த வளங்களை பயன்படுத்தாமல், அழிந்து போக விடுவது, பொறுப்புணர்வின்மையின் வெளிப்பாடாகும்.

அக்கரைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட இலுக்குச்சேனை கிராமத்தில், பல லட்சம் ரூபாய் பெறுமதியில் அமையப்பெற்றுள்ள சுகாதார நிலையக் கட்டடமானது, அதிகாரிகளின் பொறுப்பின்னை காரணமாக அழிவடைந்து வருகின்றது.

அக்கரைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட இலுக்குச்சேனை கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்கின்றனர். பல்வேறு வசதியின்னைகளுக்கு மத்தியில் வாழும் இந்தக் கிராம மக்களின் நன்மை கருதி, இங்கு அமைக்கப்பட்ட சுகாதார நிலையத்தின் தற்போதைய நிலையினையே இங்கு காண்கிறீர்கள்.

வைத்தியசாலை வசதிகளற்ற இந்தக் கிராமத்தில், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் சிறு குழந்தைகளின் சுகாதார நலன்களைக் கருத்திற் கொண்டு, இந்தக் கட்டடத்தில் சுகாதார நிலையமொன்று இயங்கி வந்தது. வாரத்துக்கு ஒன்றிரண்டு நாட்கள் இந்த சுகாதார நிலையத்தில் இலுக்குச்சேனை மக்களுக்கான சேவைகள் வழங்கப்பட்டு வந்தன. இந்த நிலையில், கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக இந்த சுகாதார நிலையம் மூடப்பட்ட நிலையில் காணப்படுவதாக இலுக்குச்சேனை கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இலுக்குச்சேனையிலுள்ள சுகாதார நிலையம் மூடப்பட்டமையினால், தற்போது இங்குள்ள கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் சிறுகுழந்தைகளைக் கொண்ட தாய்மார்கள் தமது கிராமத்திலிருந்து 15 கிலோமீற்றர் தூரத்திலுள்ள அக்கரைப்பற்று வைத்தியசாலைக்கு, சுகாதார சேவையினைப் பெற்றுக் கொள்வதற்காக சென்றுவர வேண்டியுள்ளதாக அங்குள்ள மக்கள் கூறுகின்றனர்.

பல்வேறு வசதியின்மைகள் காணப்டுகின்ற இலுக்குச்சேனைக் கிராமத்தில், வாரத்தில் ஓரிரண்டு நாட்களாவது இயங்கி வந்த சுகாதார நிலையமும் மூடப்பட்டுள்ளமையானது, அந்தக் கிராம மக்கள் மத்தியில் பாரிய விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுகாதார நிலையம் மூடப்பட்டமை ஒருபுறமிருக்க, பல லட்சம் ரூபாய் நிதியில் நிர்மாணிக்கப்பட்ட இந்தக் கட்டமானது தற்போது எதற்கும் பயன்படுத்தப்படாமல் காடுபிடித்து, சிதைவடைந்த நிலையில் காணப்படுகின்றமை வருத்தத்துக்குரிய விடயமாகும்.

வளங்கள் கிடைக்காமையினால் மக்களில் ஒரு தரப்பினர் கஷ்டங்களை அனுபவித்து வரும் நிலையில், வேறு சிலர், கிடைத்த வளத்தினைப் பயன்படுத்தாமல் இவ்வாறு அலட்சியமாக நடந்துகொள்கின்றமை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

எனவே, இலுக்குச்சேனை சுகாதார நிலையத்தினை புனரமைப்புச் செய்து, அங்கு மீளவும் சுகாதார சேவையினை வழங்குவதற்கு, கல்முனை பிராந்திய சுகாதா சேவைகள் பணிப்பாளர் காரியாலயம் உடனடி நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டும் என்பதே இந்தக் கிராமத்து மக்களின் வேண்டுகோளாகும்.

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

Comments

புதிது பேஸ்புக் பக்கம்