மு.காங்கிரசின் பொறுப்புவாய்ந்த செயலாளராக ஹசனலிதான் இருக்க வேண்டும்: கட்சியின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தர்கள் தெரிவிப்பு

🕔 December 13, 2016

hasan-ali-02– முன்ஸிப் அஹமட் –

முஸ்லிம் காங்கிரசின் பொறுப்புவாய்ந்த செயலாளராக அந்தக் கட்சியின் மூத்த நபர்களில் ஒருவரான எம்.ரி. ஹசனிதான் பதவி வகிக்க வேண்டுமென, கட்சியின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தர்கள் ஒருமித்த குரலில் தெரிவித்துள்ளனர்.

எம்.ரி. ஹசனலிக்கும், மு.காங்கிரசின் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த உயர்பீட அங்கத்தவர்கள்,  அந்தக் கட்சியின் முன்னாள் உள்ளுராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று திங்கட்கிழமை, ஹசனலியின் நிந்தவூர் இல்லத்தில் இடம்பெற்றது.

இதன்போதே, முஸ்லிம் காங்கிரசின் பொறுப்புவாய்ந்த செயலாளராக ஹசனலி பதவி வகிக்க வேண்டுமென அங்கு வருகை தந்த கட்சியின் மேற்படி முக்கியஸ்தர்கள் வலிறுத்தினர்.

மு.காங்கிரசின் செயலாளராக ஹசனலி தெரிவு செய்யப்பட்டிருந்தபோதும், கட்சியின் உயர்பீடத்துக்கான செயலாளராகத் தெரிவு செய்யப்பட்ட மன்சூர் ஏ. காதர் என்பவரை, கட்சியின் செயலாளர் எனக்கூறி, தேர்தல்கள் ஆணையகத்துக்கு மு.கா. தலைவர் அறிவித்துள்ள நிலையில், தனக்கு இழைக்கப்பட்டுள்ள அநியாயம் குறித்து இந்த சந்திப்பின்போது ஹசனலி விபரித்தார்.

மேலும், தான் வகித்து வந்த பொறுப்பு வாய்ந்த செயலாளர் பதவி, சூழ்ச்சிகரமாக வேறொரு நபருக்கு வழங்கப்பட்டுள்ளமை குறித்தும் ஹசனலி இங்கு விளக்கினார்.

இதன்போது, ஹசனலிக்கு இழைக்கப்பட்டுள்ளமை பெரும் துரோகம் என்பதை அங்கு வருகை தந்திருந்த கட்சியின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

மேலும், மு.கா.வின் பொறுப்பு வாய்ந்த செயலாளர் பதவியானது, கட்சிக்காக மிகவும் அர்ப்பணிப்புகளைச் செய்த ஹசனியிடமே தொடர்ந்தும் இருப்பதுதான் நியாயம் என்றும் அங்கிருந்தவர்கள் கூறினர்.

மு.காங்கிரசின் உயர்பீடக்கூட்டம், நாளை புதன்கிழகமை கட்சியின் தலைமையகத்தில் நடைபெறவுள்ள நிலையில், ஹசனலி இல்லத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.hasan-ali-01

Comments

புதிது பேஸ்புக் பக்கம்