நூல் வெளியீட்டு நிகழ்வில், வைத்திய அத்தியட்சகர் நக்பருக்கு கௌரவம்

🕔 December 28, 2016

ayurvedic-hosp-0111– றிசாத் ஏ காதர் –

ட்டாளைச்சேனை ஆயர்வேத தள வைத்தியசாலையின் ‘ஆரோக்கிய வாழ்வு’ நூல் வெளியீடும், வைத்தியசாலையின் பெயர்ப் பலகை திரைநீக்கும் நிகழ்வும் வைத்தியசாலை அத்தியட்சகர் டொக்டர் கே.எல். நக்பர் தலைமையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை நடைபெற்றன.

மத்திய மருந்தகமாக ஆரமப்பிக்கப்பட்ட இவ்வைத்தியசாலை, மாவட்ட வைத்தியசாலையாக நீண்டகாலம் இயங்கியது. இந்த நிலையில், தள வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ளது.

இவ் வைத்தியசாலையின் வரலாற்றை வாழவைக்கும் ஒரு பணியாக, வைத்திய அத்தியட்சகர் கே.எல்.எம். நக்பரின் பெரும் முயற்சியினால் உருவாக்கப்பட்ட நூல், வெளியிடப்பட்டது.

இந்நிகழ்வில் கிழக்குமாகாண சுகாதார, சுதேச மருத்துவத்துறை அமைச்சர் ஏ.எல்.எம். நசீர் பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எம்.எஸ். உதுமாலெவ்வை கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர்.

மேலும் முதலமைச்சின் செயலாளர் யு.எல்.அஸீஸ், சுகாதார அமைச்சின் உதவிச் செயலாளர் ஜே. உசைனுதீன், சுசேத வைத்திய திணைக்களத்தின் மாகாண ஆணையாளர் திருமதி ஆர். சிறீதர், வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோரும் இந் நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

அட்டாளைச்சேனை ஆயுர்வேத தள வைத்திய சாலையின் வளர்ச்சிக்கு தன்னை அர்ப்பணித்து பணியாற்றிய வைத்திய அத்தியட்சகர் கே.எல்.நக்பர், இந் நிகழ்வில் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.ayurvedic-hosp-0222 ayurvedic-hosp-0333

Comments