முஸ்லிம்களை தீகவாபியில் வைத்து தாக்கியவர்களுக்கு விளக்க மறியல்

🕔 December 14, 2016
Courts order - 01– அப்துல்லாஹ் இப்னு  அன்சார் –

முஸ்லிம்களை தீக்கவாபியில் வைத்துத் தாக்கிய இரண்டு நபர்களை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிபதி நளினி கந்தசாமி இன்று வியாழ உத்தரவிட்டார்.

தீகவாயில் கடந்த 02ஆம் திகதி முஸ்லிம்களை தாக்கிய சம்பவம் தொடர்பில் தமண பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இரு சிங்களவர்கள் இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட போதே, மேற்படி உத்தரவு வழங்கப்பட்டது.

பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் சட்டத்தரணிகளான எம்.எம். பஹிஜ் மற்றம் யூ.எல். வசிம் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள், வீதியால் சென்றவர்களை மறித்து மது போதையில் தாக்கினார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர்.

இறக்காமம் பிரதேசத்தைச் சேர்ந்த தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவன் இம்ரான் மற்றும் அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் அஸ்மி ஏ கபூர் உட்பட வீதியால் பயணித்த பலரை, சந்தேக நபர்கள் தாக்கியதுடன் அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள்களையும் தாக்கி உடைத்தனர்.

இத்தாக்குதல் காரணமாக தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவன் பலத்த காயத்திற்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் தொடர்பில் இன்னும் சிலர் கைது செய்யப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்