Back to homepage

Tag "பொலிஸார்"

மகன் சம்பந்தப்பட்ட வீடியோ காட்சிகளை, பொலிஸாரிடமிருந்து ஜனாதிபதி பெற்றுக் கொண்டதாக விமர்சனம்

மகன் சம்பந்தப்பட்ட வீடியோ காட்சிகளை, பொலிஸாரிடமிருந்து ஜனாதிபதி பெற்றுக் கொண்டதாக விமர்சனம் 0

🕔16.Oct 2016

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது மகனைக் காப்பாற்றுவதற்காக சட்டத்தினைச் துச்சமாக மதித்து செயற்பட்டுள்ளார் என்று கொழும்பு ரெலிகிரப் இணையத்தளம் விமர்சித்துள்ளது. ஜனாதிபதியின் மகன் தஹம் சிறிசேன, அண்மையில் கிலிக் இரவுநேர களியாட்ட விடுதியில் தவறான செயலில் ஈடுபட்டதாகவும், தனது பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் இணைந்து அங்கிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்களை தாக்கியதோடு, விடுதியின் சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும்...
கைது செய்ய முயன்ற பொலிஸார் மீது, கைக்குண்டுத் தாக்குதல்

கைது செய்ய முயன்ற பொலிஸார் மீது, கைக்குண்டுத் தாக்குதல் 0

🕔2.Oct 2016

பாதாள உலகத் தலைவர் ஒருவரை அதுருகிரிய பகுதியில் பொலிஸார் கைது செய்ய முயற்சித்த போது, குறித்த நபர் – பொலிஸார் மீது கைக்குண்டு ஒன்றை வீசி விட்டுத் தப்பிச் சென்றுள்ளார். இச்சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதுருகிரிய பிரதேசத்தில் அர்ஜுன் என்று நன்கு அறியப்பட்ட பாதாள உலகத் தலைவர் ஒருவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார். குறித்த

மேலும்...
தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டோடியவன் கைது

தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டோடியவன் கைது 0

🕔7.Jul 2016

– க. கிஷாந்தன் – கொட்டகலை பகுதியில் பெண்ணொருவர் அணிந்திருந்த தங்கசங்கிலியை அறுத்துச் சென்ற நபர் ஒருவரை திம்புள்ள பத்தனை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது. 30 வயது மதிக்கதக்க பெண் ஒருவரின் தங்க சங்கிலியே இவ்வாறு அறுத்து செல்லப்பட்டது. இச்சம்பவம் தொடர்பில் பிரதேசவாசிகள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, விரைந்து செயற்பட்டு சந்தேக பொலிஸார் மடக்கிப்

மேலும்...
வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்

வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் 0

🕔5.Jul 2016

வாகனமொன்றின் மீது இன்று செவ்வாய்கிழமை பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். இச்சம்பவம் பன்னிபிட்டிய – ஹம்பகஸ்ஹதர பிரதேசத்தில் இடம்பெற்றது. தமது உத்தரவை மீறி சென்ற வாகனம் மீதே, பொலிஸார் இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். குறித்த வாகனத்தில் போதைப்பொருள் கொண்டுசெல்லப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, அதை தடுத்து நிறுத்த பொலிஸார் முயன்றுள்ளனர். எனினும், வாகன சாரதி பொலிஸாரின் சமிக்ஞையை

மேலும்...
கல்லடி ஆற்றில் குதித்து, இளைஞர் தற்கொலை முயற்சி

கல்லடி ஆற்றில் குதித்து, இளைஞர் தற்கொலை முயற்சி 0

🕔3.Jul 2016

– பழுலுல்லாஹ் பர்ஹான் –மட்டக்களப்பு கல்லடி பழைய பாலத்திலிருந்து ஆற்றில் குதித்து சுமார் 19 வயதுடைய இளைஞன் ஒருவர்  தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.மேற்படி சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது.மேற்படி இளைஞரைக் காப்பாற்றும் முயற்சியில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.இந் நிலையில், கல்லடி பழைய பாலத்தில் பெரும் திரளான மக்கள் கூடியுள்ளனர்.மட்டக்களப்பு கூழாவடி பிரதேசத்தைச்  சேர்ந்த கிஷோர் என்பவரே, இவ்வாறு

மேலும்...
கடை உடைத்து திருடியவருக்கு விளக்க மறியல்

கடை உடைத்து திருடியவருக்கு விளக்க மறியல் 0

🕔27.Jun 2016

 – எப். முபாரக் – கந்தளாய் பிரதேசத்தில் கடையொன்றினை உடைத்து மூன்றரை லட்சம் ரூபாய்  பணத்தினை திருடிய சந்தேக நபர் ஒருவரை, இம்மாதம்  11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதவான் நீதிமன்ற நீதிவான் எச்.ஜி. தம்மிக்க இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டார். கந்தளாய் பிரதேசத்தில் கடந்த வாரம் கையடக்கத் தொலைபேசிக் கடைகள் இரண்டு, மற்றும்

மேலும்...
ஆசிரியை தாக்கிய 10 வயது மாணவன், காத்தான்குடி வைத்தியசாலையில் அனுமதி

ஆசிரியை தாக்கிய 10 வயது மாணவன், காத்தான்குடி வைத்தியசாலையில் அனுமதி 0

🕔11.Jun 2016

ஆசிரியையொருவர்- தரம் 05 இல் கல்வி கற்கும் மாணவர் ஒருவரை தாக்கியதில், பாதிப்புக்குள்ளான மாணவர், காத்தான்குடி ஆதார வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காத்தான்குடியிலுள்ள பாடசாலையொன்றில் கல்வி பயிலும் சாக்கிர் ரஹ்மான் எனும் 10 வயதுடைய மாணவனே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார். பிரத்தியேக வகுப்பு நடைபெற்ற போதே மாணவன் தாக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு

மேலும்...
மாடி வீட்டுத் திருடன், வெள்ளவத்தையில் அகப்பட்டார்

மாடி வீட்டுத் திருடன், வெள்ளவத்தையில் அகப்பட்டார் 0

🕔11.Jun 2016

வெள்ளவத்தையிலுள்ள தொடர் மாடி வீடொன்றில் பத்து லட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளையும், 02 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தையும் திருடிய நபரொருவரை வெள்ளவத்தைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த தொடர்மாடியின் கழிவுநீர் குழாய் வழியாக ஏறி, ஆறாவது மாடியில் உள்ள வீடு ஒன்றினுள் புகுந்த மேற்படி நபர், அங்கு கொள்ளையில் ஈடுபட்டுள்ளார். சந்தேக நபர், கொஹுவல

மேலும்...
பள்ளிவாசலின் பெயரில் போலி சிபாரிசுக் கடிதம் தயாரித்து, பணம் வசூலித்தவர் கைது

பள்ளிவாசலின் பெயரில் போலி சிபாரிசுக் கடிதம் தயாரித்து, பணம் வசூலித்தவர் கைது 0

🕔9.Jun 2016

– எப். முபாரக் – பள்ளிவாசல் ஒன்றின் சிபாரிசு கடிதம் எனக் கூறப்படும் போலியான கடிதங்களைக் காட்டி, பணம் வசசூலித்த சந்தேக நபர் ஒருவரை, நேற்று புதன்கிழமை மாலை கந்தளாய் பொலிஸார் கைது செய்தனர். மன்னார் வீதி, புத்தளம் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர், புத்தளம்

மேலும்...
மூதூர் களப்பு பகுதியில், உரப்பையிலிடப்பட்ட சிசுவின் சடலம் மீட்பு

மூதூர் களப்பு பகுதியில், உரப்பையிலிடப்பட்ட சிசுவின் சடலம் மீட்பு 0

🕔1.Jun 2016

– எப். முபாரக் – சிசுவின் சடலமொன்றை திருகோணமலை – மூதூர் பகுதியில் இன்று புதன்கிழமை மூதூர் பொலிஸார் மீட்டுள்ளனர். இலங்கைப் போக்குவரத்து சபையின் மூதூர் நிலையத்தின் முன்னாலுள்ள களப்பு பகுதியிலேயே இந்த சிசுவின் சடலம் மீட்கப்பட்டது. உரப்பையில் இடப்பட்டு, சிசுவின் சடலம் வீசப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, மூதூர் பொலிஸார் அதனை மீட்டனர். சடலம் தற்பொழுது

மேலும்...
ஹெரோயினுடன்அக்கரைப்பற்றில் நபர் கைது

ஹெரோயினுடன்அக்கரைப்பற்றில் நபர் கைது 0

🕔31.May 2016

– முன்ஸிப் – அக்கரைப்பற்று பிரதேசத்தில் ஹெரோயின் போதைப் பொருளுடன் நபரொருவர் இன்று செவ்வாய்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார் என்று அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர். சுமார் 02 கிராம் ஹெரோயினுடன் அக்கரைப்பற்று காகில்ஸ் புட் சிட்டி அருகில் வைத்து, மேற்படி நபரை அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்தனர். பொத்துவிலில் இருந்து வேறு நபர் ஒருவருக்கு கொடுப்பதற்காக, குறித்த

மேலும்...
ஆற்று மணல் ஏற்றியவர்கள் கந்தளாயில் கைது

ஆற்று மணல் ஏற்றியவர்கள் கந்தளாயில் கைது 0

🕔28.May 2016

– எப்.முபாரக் – திருகோணமலை மாவட்டம் கந்தளாயில் அனுமதிப்பத்திரமின்றி  ஆற்று மணல் ஏற்றிச்சென்ற இருவரை இன்று சனிக்கிழமை கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர். கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 24 மற்றும் 30 வயதுடைய இருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கந்தளாய் சீனிபுரவிலிருந்து அனுமதிப்பத்திரமின்றி கந்தளாய் பகுதிக்கு உழவு இயந்திரத்தில் மணலைக் கொண்டு சென்ற போதே பொலிஸ்

மேலும்...
மஸ்கெலியாவில் மண் சரிவு; 200 பேர் இடம்பெயர்வு

மஸ்கெலியாவில் மண் சரிவு; 200 பேர் இடம்பெயர்வு 0

🕔28.May 2016

– க. கிஷாந்தன் – மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காட்மோர் தோட்டத்தில் இன்று சனிக்கிழமை காலை ஏற்பட்ட மண்சரிவினால் 200 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். காட்மோர் தோட்டம் புரோக்மோர் பிரிவில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதுடன் குடியிருப்பு சுவர்களிலும் வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. மண்சரிவு ஏற்பட்டுள்ள பகுதியிலுள்ள 41 குடும்பங்களை சேர்ந்த 200 பேரை உடனடியாக

மேலும்...
அமுக்கக் குண்டு கிண்ணியாவில் மீட்பு

அமுக்கக் குண்டு கிண்ணியாவில் மீட்பு 0

🕔22.May 2016

– எப். முபாரக் – அமுக்கக் குண்டொன்றினை திருகோணமலை – கிண்ணியா கடற்கரையோரத்தில் நேற்று சனிக்கிழமை மாலை கிண்ணியா பொலிஸார் மீட்டனர். இந்தக் குண்டு கடலலையில் அடித்து வரப்பட்டதாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. கிண்ணியா பழைய வைத்தியசாலைக்கு முன்னால் கடலில் குளிக்கச்சென்ற இளைஞர்கள்,  பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து இக்குண்டு மீட்கப்பட்டதாக கிண்ணியா பொலிஸர் கூறினார். குறித்த குண்டை செயலிழக்க

மேலும்...
வெள்ளத்தைப் பயன்படுத்திய கொள்ளையர்கள் 15 பேர் கைது

வெள்ளத்தைப் பயன்படுத்திய கொள்ளையர்கள் 15 பேர் கைது 0

🕔22.May 2016

வெள்ள அனர்த்தத்தைப் பயன்படுத்தி கொள்ளை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த 15 பேரை, பொலிஸார் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் தமது வீடுகள் மூழ்கியமையினை அடுத்து, பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். இதனையடுத்து குறித்த வீடுகளுக்குள் புகுந்து அங்கிருக்கும் பொருட்களை சிலர் கொள்ளையிட்டு வருகின்றனர். அவ்வாறானவர்களில் 15 பேரையே பொலிஸார்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்