கைது செய்ய முயன்ற பொலிஸார் மீது, கைக்குண்டுத் தாக்குதல்

🕔 October 2, 2016

hand-grenade-012பாதாள உலகத் தலைவர் ஒருவரை அதுருகிரிய பகுதியில் பொலிஸார் கைது செய்ய முயற்சித்த போது, குறித்த நபர் – பொலிஸார் மீது கைக்குண்டு ஒன்றை வீசி விட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.

இச்சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அதுருகிரிய பிரதேசத்தில் அர்ஜுன் என்று நன்கு அறியப்பட்ட பாதாள உலகத் தலைவர் ஒருவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார்.

குறித்த நபரின் வீட்டில் வைத்து அவரை பொலிஸார் கைது செய்ய முயற்சித்தபோதே, கைக்குண்டியை வீசி விட்டு, அவர் தப்பிச் சென்றுள்ளார்.

எவ்வாறாயினும் சந்தேக நபர் தப்பிச் செல்லும் போது, பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், இதன் காரணமாக அவரின் தோள் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், குறித்த கைக்குண்டுத் தாக்குதலில் எவரும் காயமடையவில்லை என அறிய முடிகிறது.

Comments