நாடு முழுவதும் 264 புதிய தொழு நோயாளர்கள் இவ்வருடம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

🕔 May 15, 2024

நாடு முழுவதிலும் – இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து மொத்தம் 264 புதிய தொழுநோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

புதிதாக அடையாளம் காணப்பட்ட நோயாளர்களில் 24 பேர் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என தொழுநோய் எதிர்ப்பு பிரசாரத்தின் (Anti-Leprosy Campaign) பணிப்பாளர் டொக்டர் நிருபா பல்லேவத்த தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டில், மொத்தம் 1,580 தொழுநோயாளிகள் பதிவாகியதாகவும் அவர்களில் பெரும்பான்மையானவர்கள் (1520) புதிதாக அடையாளம் காணப்பட்ட நோயாளிகள் என்றும் அவர் மேலும் கூறினார். இதற்கிடையில், அந்த 1,580 நோயாளிகளில், 180 பேர் 15 வயதுக்குட்பட்டவர்களாவர்.

“2024ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், 274 நோயாளிகளை நாங்கள் அடையாளம் கண்டோம். அவர்களில் 264 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்ட நோயாளிகள். 274 பேரில் 21 பேர், அதாவது 08 வீதமானோர் 15 வயதுக்குட்பட்டவர்கள். அவர்களால் நோயைப் பரப்ப முடியாது” எனவும் டொக்டர் நிருபா பல்லேவத்த மேலும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்