சா/த பரீட்சை நிறைவடைந்தவுடன் பாடசாலைகளில் உயர்தர வகுப்புகளை ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி

🕔 May 14, 2024

ற்போது நடைபெற்று வரும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவடைந்தவுடன், பாடசாலைகளில் க.பொ.த உயர்தர வகுப்புகளை உடனடியாக ஆரம்பிக்கும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

சாதாரண தரப் பரீட்சை முடிவடைந்த பின்னர் – பெறுபேறுகளை வெளியிடுவதற்கு பரீட்சை திணைக்களத்துக்கு குறைந்தது மூன்று மாத கால அவகாசம் தேவையாக இருக்கும்.

இந்த காலகட்டத்தில், மாணவர்கள் பாடசாலைக் கல்வியிலிருந்து விலகியிருப்பதே, க.பொ.த உயர்தரக் கல்வியைப் பின்தொடர்வது குறைவதற்கும், பல்வேறு சமூகப் பிரச்சினைகளுக்கும் காரணம் என, அரசாங்கம் தெரிவிக்கின்றது.

இந்த விடயங்களைக் ருத்தில் கொண்டு, இம்மாதம் சாதாரண தரப் பரீட்சை முடிவடைந்ததைத் தொடர்ந்து, பாடசாலைகளில் உயர்தர வகுப்புகளை ஆரம்பிப்பது பொருத்தமானது என கல்வி அமைச்சு முடிவு செய்தது.

இந்த நடவடிக்கை மாணவர்களின் நேரத்தை திறம்பட நிர்வகிப்பதற்கும் ஆசிரியர்களுக்கு உயர்தர பாடத்திட்டத்தை உள்ளடக்குவதற்கு போதுமான நேரத்தை வழங்குவதற்கும் உதவும் என அமைச்சு நம்புகிறது.

இதன்படி, சாதாரண தரப் பரீட்சை முடிவடைந்தவுடன், உயர்தர வகுப்புகளை உடனடியாக ஆரம்பிக்க – கல்வி அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்