ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் ஓட்டியவர்களுக்கு 427,500 ரூபாய் அபராதம்

🕔 May 14, 2024

ணத்துக்காக பந்தயம் கட்டி – ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள்களை ஓட்டிய 15 பேருக்கு நேற்று (13) கொழும்பு போக்குவரத்து நீதிமன்றம் 427,500 ரூபாயை அபராதமாக விதித்தது.

மேலும் அவர்களது ஒட்டுநர் உரிமையினையும் 06 மாதங்களுக்கு நீதிமன்றம் ரத்து செய்தது.

இந்த மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களை – பம்பலப்பிட்டி பொலிஸார் இம்மாதம் தம் 05ஆம் திகதி அதிகாலை கைது செய்ததோடு, அவர்களை பொலிஸ் நிலையத்தில் வைத்து பொலிஸ் பிணையில் விடுவித்தனர். 20 மற்றும் 28 வயதுடைய சந்தேக நபர்கள் கொழும்பு மற்றும் கொழும்பு புறநகர் பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

இதன் பின்னர் சந்தேக நபர்கள் கொழும்பு போக்குவரத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டமயினை அடுத்து, அவர்களுக்கு மேற்படி அபராதம் விதிக்கப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்