ஹெரோயினுடன்அக்கரைப்பற்றில் நபர் கைது

🕔 May 31, 2016

Heroin - 098– முன்ஸிப் –

க்கரைப்பற்று பிரதேசத்தில் ஹெரோயின் போதைப் பொருளுடன் நபரொருவர் இன்று செவ்வாய்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார் என்று அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

சுமார் 02 கிராம் ஹெரோயினுடன் அக்கரைப்பற்று காகில்ஸ் புட் சிட்டி அருகில் வைத்து, மேற்படி நபரை அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்தனர்.

பொத்துவிலில் இருந்து வேறு நபர் ஒருவருக்கு கொடுப்பதற்காக, குறித்த போதைப் பொருளை சந்தேக நபர் கொண்டு வந்ததார் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருவதாக பொலிஸார் கூறினர்.

கைது செய்யப்பட்டுள்ள நபர் அக்கரைப்பற்றைச் சேர்ந்தவர் என்றும், பொத்துவில் பிரதேசத்தில் திருமணம் செய்துள்ளார் எனவும் தெரியவருகிறது.

சந்தேக நபர் தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், நாளை புதன்கிழமை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்