மூதூர் களப்பு பகுதியில், உரப்பையிலிடப்பட்ட சிசுவின் சடலம் மீட்பு

🕔 June 1, 2016

Fingers Of Newborn Baby– எப். முபாரக் –

சிசுவின் சடலமொன்றை திருகோணமலை – மூதூர் பகுதியில் இன்று புதன்கிழமை மூதூர் பொலிஸார் மீட்டுள்ளனர்.

இலங்கைப் போக்குவரத்து சபையின் மூதூர் நிலையத்தின் முன்னாலுள்ள களப்பு பகுதியிலேயே இந்த சிசுவின் சடலம் மீட்கப்பட்டது.

உரப்பையில் இடப்பட்டு, சிசுவின் சடலம் வீசப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, மூதூர் பொலிஸார் அதனை மீட்டனர்.

சடலம் தற்பொழுது மூதூர் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்