வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்

🕔 July 5, 2016

Gun - 012343வாகனமொன்றின் மீது இன்று செவ்வாய்கிழமை பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.

இச்சம்பவம் பன்னிபிட்டிய – ஹம்பகஸ்ஹதர பிரதேசத்தில் இடம்பெற்றது.

தமது உத்தரவை மீறி சென்ற வாகனம் மீதே, பொலிஸார் இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.

குறித்த வாகனத்தில் போதைப்பொருள் கொண்டுசெல்லப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, அதை தடுத்து நிறுத்த பொலிஸார் முயன்றுள்ளனர்.

எனினும், வாகன சாரதி பொலிஸாரின் சமிக்ஞையை மீறிச் சென்றதால், வாகனத்தின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆயினும், வாகனம் தலவத்துகொட பிரதேசத்தை நோக்கி தப்பிச் சென்றுள்ள நிலையில், அதை தேடும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்