Back to homepage

Tag "பொலிஸார்"

ஹர்த்தாலுக்கு டயர் எரித்தவர்கள் கைது

ஹர்த்தாலுக்கு டயர் எரித்தவர்கள் கைது 0

🕔12.Jan 2019

வீதியில் டயர் எரித்த குற்றச்சாட்டில், இளைஞர்கள் இருவரை காத்தான்குடி பொலிஸார் நேற்று வைள்ளிக்கிழமை கைது செய்தனர். நாவற்குடா பகுதியைச் சேர்ந்த 19 மற்றும் , 23 வயதுடைய இரு இளைஞர்களே, இவ்வாறு கைது செய்யப்பட்டனர். கிழக்கு மாகாண ஆளுநராக எம். ஹஸ்புல்லா நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், நேற்று வெள்ளிக்கிழமை தமிழர்கள் தரப்பில் ஹர்த்தால் மேற்கொள்ளும்

மேலும்...
அட்டாளைச்சேனை கடற்கரையில் சட்ட விரோத மணல் அகழ்வு; பொலிஸார் கண்டுகொள்வதில்லை என, மக்கள் புகார்

அட்டாளைச்சேனை கடற்கரையில் சட்ட விரோத மணல் அகழ்வு; பொலிஸார் கண்டுகொள்வதில்லை என, மக்கள் புகார் 0

🕔13.Dec 2018

– மரைக்கார் – அட்டாளைச்சேனை கடற்கரைப் பகுதிகளில் சிலர் சட்டவிரோதமாக மண் அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். ‘கெப்’ ரக வாகனங்களைப் பயன்படுத்தியும், இவ்வாறு அகழும் மண் கொண்டு செல்லப்படுவதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர். இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கினாலும், சட்ட விரோத மண் அகழ்வில் ஈடுபடும் சிலரை, பொலிஸார் கண்டுகொள்வதில்லை

மேலும்...
வவுணதீவில் பொலிஸார் இருவர், துப்பாக்கிச் சூட்டில் பலி

வவுணதீவில் பொலிஸார் இருவர், துப்பாக்கிச் சூட்டில் பலி 0

🕔30.Nov 2018

– அஹமட் – மட்டக்களப்பு – வவுணதீவு பிரதேசத்தில் பொலிஸார் இருவரின் சடலங்கள் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளன. வவுணதீவிலுள்ள பாதுகாப்பு காவலணில் கடமையாற்றியவர்களே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் சிங்களவர் மற்றையவர் தமிழராவார். இரவு நேரக் கடமையில் ஈடுபட்டிருந்த இவர்கள் மீது அதிகாலை வேளையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என, அங்குள்ள பொலிஸார்

மேலும்...
பொலிஸாரின் கோமாளித்தனம்: உரம் தயாரித்த விவசாயி, கசிப்பு உற்பத்தி செய்ததாக கைது

பொலிஸாரின் கோமாளித்தனம்: உரம் தயாரித்த விவசாயி, கசிப்பு உற்பத்தி செய்ததாக கைது 0

🕔8.Feb 2018

திரவத் தன்மையுடைய சேதனப் பசளை தயாரித்த விவசாயி ஒருவரை, சட்ட விரோத கசிப்புக் காய்ச்சியதாகக் கூறி, பொலிஸார் கைது செய்து செய்த சம்பவமொன்று, கினிகத்தேன பகுதியில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து, ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. ‘கினிகத்தேன பொலிஸாரின் கோமாளித்தனம்’ எனும் தலைப்பில் குறித்த செய்திக்கு, அந்த ஊடகம் தலைப்பிட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர் கினிகத்தேன பகுதியைச்

மேலும்...
போலி நாணயத்தின் புழக்கம் அதிகரிப்பு; அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

போலி நாணயத்தின் புழக்கம் அதிகரிப்பு; அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை 0

🕔1.Jul 2017

குற்றப் புலனாய்வு பிரிவினர் இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக, 38 லட்சத்து 94 ஆயிரத்து 600 ரூபாய்க்கு இணையான போலி நாணயத் தாள்களைக் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குற்றப் புலனாய்வுப் பிரிவின் போலி நாணயம் தொடர்பான குற்றங்களைக் கையாளும் துறையினருக்குக் கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில், மேற்படி நாணயத் தாள்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார்

மேலும்...
முஸ்லிம்களின் 1.5 பில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள், ஒரு மாதத்தில் நாசம்: அமைச்சர் றிசாட் கவலை

முஸ்லிம்களின் 1.5 பில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள், ஒரு மாதத்தில் நாசம்: அமைச்சர் றிசாட் கவலை 0

🕔24.Jun 2017

– சுஐப் எம் காசிம் –இனவாதச் செயற்பாடுகள் காரணமாக, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான 1.5 பில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் அழிவடைந்துள்ளன என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் கவலை தெரிவித்தார்.மேலும், சதிகாரர்களின் வலைக்குள் சட்டமும் ஒழுங்கும் சிக்கிக் கிடக்கின்றன என்றும் அவர் குற்றம்சாட்டினார்.குருநாகல் கெகுணுகொல்ல சதகா

மேலும்...
நாட்டில் நடப்பது சிறிய சம்பவங்கள், படையினரை பயன்படுத்த அவசியமில்லை: பாதுகாப்பு செயலாளர்

நாட்டில் நடப்பது சிறிய சம்பவங்கள், படையினரை பயன்படுத்த அவசியமில்லை: பாதுகாப்பு செயலாளர் 0

🕔13.Jun 2017

படையினரை பயன்படுத்தும் அளவிற்கு நாட்டில் பிரச்சினைகள் ஏதும் இல்லை என்று, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். எனினும் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் அனைத்து விடயங்களிலும், பொலிஸாருக்கு முப்படையினர் ஒத்துழைப்புகளை வழங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். பாதுகாப்பு அமைச்சில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும்

மேலும்...
விசாரணைகளுக்கு முன்பாகவே, பொலிஸார் தீர்ப்புக் கூறிக் கொண்டிருக்கின்றனர்: அமைச்சர் றிசாட் விசனம்

விசாரணைகளுக்கு முன்பாகவே, பொலிஸார் தீர்ப்புக் கூறிக் கொண்டிருக்கின்றனர்: அமைச்சர் றிசாட் விசனம் 0

🕔10.Jun 2017

முஸ்லிம்களின் கடைகள் எரிகின்ற போதெல்லாம், அதற்கு பொலிஸார் வேறு வியாக்கியானம் கூறி வருவது கேவலமானது என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் விசனம் தெரிவித்துள்ளார். முஸ்லிம் சமூகத்தின் பொருளாதாரத்தை மீண்டும் மீண்டும் இலக்கு வைத்து வேண்டுமென்றே அழித்து வரும் நாசகாரிகளை கண்டு பிடிக்க வேண்டிய பொறுப்புக் கொண்ட பொலிசாரும் பொலிஸ் திணைக்களமும், அதனைச் செய்வதை விடுத்து, கடை எரிப்பு சம்பவங்கள்

மேலும்...
குளித்துக் கொண்டிருந்த ரஷ்ய பெண்ணை, பாலியல் தொந்தரவு செய்த பொலிஸார் கல்கிஸ்ஸையில் கைது

குளித்துக் கொண்டிருந்த ரஷ்ய பெண்ணை, பாலியல் தொந்தரவு செய்த பொலிஸார் கல்கிஸ்ஸையில் கைது 0

🕔29.Jan 2017

கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த ரஷ்ய நாட்டு பெண் ஒருவரை பாலியல் தொந்தரவு செய்த இரு பொலிஸார் , நேற்று சனிக்கிழமை பிற்பகல் கல்கிஸ்ஸையில் வைத்துக் கைது செய்யப்பட்டனர். மேற்படி இருவரும் அமைச்சர்களுக்கான பாதுகாப்புப் பிரிவில் கடமை புரிபவர்கள் எனத் தெரியவருகிறது. கரையோரப் பாதுகாப்பின் நிமித்தம் அங்கு வந்த பொலிஸார், மேற்படி இருவரையும் கைது செய்தனர். இதன்போது,

மேலும்...
பொலிஸ் உத்தியோகத்தர்களைத் தாக்கி விட்டு, கைத்துப்பாக்கி அபகரிப்பு

பொலிஸ் உத்தியோகத்தர்களைத் தாக்கி விட்டு, கைத்துப்பாக்கி அபகரிப்பு 0

🕔26.Dec 2016

பொலிஸார் இருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட சந்தேக நபர்கள் இருவர், சம்பவத்தின்போது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் கைத்துப்பாக்கியினையும் அபகரித்துச் சென்றுள்ளனர். மேற்படி பொலிஸ் உத்தியோகத்தர் இருவரும் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கட்டியால பிரதேசத்தில் கடமையாற்றிக் கொண்டிருந்தபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கட்டானை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸார் இருவர் மீதே, இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாக்குலுக்குள்ளான

மேலும்...
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மரணம்; கைதான ஐந்து பொலிஸாருக்கும், தொடர்ந்தும் விளக்க மறியல்

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மரணம்; கைதான ஐந்து பொலிஸாருக்கும், தொடர்ந்தும் விளக்க மறியல் 0

🕔18.Nov 2016

யாழ்ப்பாணத்தில் துப்பாக்சிச் சூட்டின் போது பலியானதாகக் கூறப்படும் இரண்டு பல்கலைக்கழக மாணவர்களின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்களையும், டிசம்பர் மாதம் 02 ஆம் திகதி வரை, தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேற்படி ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்களும் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம்

மேலும்...
பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம்; உப பரிசோதகர் பலி: குருணாகலில் சம்பவம்

பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம்; உப பரிசோதகர் பலி: குருணாகலில் சம்பவம் 0

🕔16.Nov 2016

குருநாகல் – மாஸ்பொத பகுதியில் நேற்று செவ்வாய்கிழமை இரவு பொலிஸாரின் வாகனம் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் பலியானார். மேலும், இரு பொலிஸார் காயமடைந்துள்ளனர். ஹோட்டல் ஒன்றுக்கு அருகில் வைத்து, மேற்படி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிப் பிரயோகத்தின் பின்னர் பஸ் ஒன்றில் ஏறி தப்பிச் சென்ற குறித்த நபர்

மேலும்...
யாழ் மாணவர்களை சுட்டதாகக் கூறப்படும் பொலிஸார், சம்பவ இடத்துக்கு அழைத்து வரப்பட்டு விசாரணை

யாழ் மாணவர்களை சுட்டதாகக் கூறப்படும் பொலிஸார், சம்பவ இடத்துக்கு அழைத்து வரப்பட்டு விசாரணை 0

🕔26.Oct 2016

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் பலியான இடத்திற்கு சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட 05 பொலிஸாரும் இன்று புதன்கிழமை காலை அழைத்துவரப்பட்டனர். கை விலங்கிடப்பட்டு விசேட அதிரடிப் படையினரின் பாதுகாப்புடன், சிறைச்சாலை பாதுகாப்பு அதிகாரிகளினால் குறித்த பொலிஸார் அழைத்து வரப்பட்டுள்ளனர். இதேவேளை, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய தடயவியல் பொலிஸார் குறித்த இடத்தை இன்று காலை ஆய்வு செய்தனர். அழைத்துவரப்பட்ட பொலிஸார்,

மேலும்...
பொலிஸார் இருவர் மீது வாள் வெட்டு; சுண்ணாகத்தில் சம்பவம்

பொலிஸார் இருவர் மீது வாள் வெட்டு; சுண்ணாகத்தில் சம்பவம் 0

🕔23.Oct 2016

பொலிஸார் இருவர் யாழ்ப்பாணம் – சுண்ணாகம் பகுதியில் வாள் வெட்டுக்கு இலக்காகிய நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது ஆறு பேர் கொண்ட குவினரே இந்த வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதன்போது தாக்குதலுக்குள்ளாகி காயமடைந்த பொலிஸார் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, வர்த்தக நிலைய உரிமையாளர் ஒருவர்

மேலும்...
யாழ் மாணவர்கள் மரணம் தொடர்பில் 05 பொலிஸார் கைது; பணியிலிருந்தும் இடைநீக்கம்

யாழ் மாணவர்கள் மரணம் தொடர்பில் 05 பொலிஸார் கைது; பணியிலிருந்தும் இடைநீக்கம் 0

🕔21.Oct 2016

யாழ்ப்பாணம் பல்லைக்கழக மாணவர்களின் மரணம் தொடர்பில் –  ஐந்து பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, குறித்த பொலிஸார் ஐவரும் பணியிலிருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தின் செய்திப் பணிப்பாளர் ஹில்மி முகம்மத் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் –

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்