பலஸ்தீனத்தில் இஸ்ரேல் நடத்திவரும் இனப்படுகொலைக்கு எதிராக கொழும்பில் கவன ஈர்ப்பு போராட்டம்: சஜித், றிசாட் உள்ளிட்டோரும் பங்கேற்பு

🕔 May 13, 2024

லஸ்தீனத்தில் இஸ்ரேல் நடத்திவரும் இனப்படுகோலையைக் கண்டித்தும், பலஸ்தீனர்களுக்கு ஆதரவை வெளிப்படுத்தும் வகையிலும் கவன ஈர்ப்புப் போராட்டமொன்று கொழும்பு – கொள்ளுபிட்டியில் இன்று (13) நடைபெற்றது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீன், ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான் மற்றும் எஸ்.எம். மரிக்கார் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பலர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இஸ்ரேல் உற்பத்திகளைப் புறக்கணிப்போம் – சியோனிசத்தை தோற்கடிப்போம், பலஸ்தீனம் – பலஸ்தீனர்களுக்கு சொந்தமானது, வெறிச் செயலை நிறுத்து, சியோனிசம் என்பது பயங்கரவாதம், காஸாவில் நடக்கும் இனப்படுகொலையை நிறுத்து, ஐக்கிய நாடுகள் சபை – ஆழ்ந்த தூக்கத்தில் மற்றும் பலஸ்தீனக்கு விடுதலை வேண்டும் போன்ற சுலோகங்களை கவன ஈர்ப்பில் ஈடுபட்டோர் இதன்போது ஏந்தியிருந்தனர்.

இந்த போராட்டத்தில் ஊடகவியலாளர்கள், மற்றும் பல சமூகங்களையும் சேர்ந்த பெருந்திரளான பொதுமக்களும் பங்கேற்றிருந்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்