குளித்துக் கொண்டிருந்த ரஷ்ய பெண்ணை, பாலியல் தொந்தரவு செய்த பொலிஸார் கல்கிஸ்ஸையில் கைது

🕔 January 29, 2017

Arrested - 01டற்கரையில் குளித்துக் கொண்டிருந்த ரஷ்ய நாட்டு பெண் ஒருவரை பாலியல் தொந்தரவு செய்த இரு பொலிஸார் , நேற்று சனிக்கிழமை பிற்பகல் கல்கிஸ்ஸையில் வைத்துக் கைது செய்யப்பட்டனர்.

மேற்படி இருவரும் அமைச்சர்களுக்கான பாதுகாப்புப் பிரிவில் கடமை புரிபவர்கள் எனத் தெரியவருகிறது.

கரையோரப் பாதுகாப்பின் நிமித்தம் அங்கு வந்த பொலிஸார், மேற்படி இருவரையும் கைது செய்தனர். இதன்போது, குறித்த இருவரும் தன்னை பாலியல் தொந்தரவு செய்தாக, பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் ரஷ்ய பெண் கூறியுள்ளார்.

இதேவேளை, சந்தேக நபர்களை கைது செய்ய முற்பட்ட வேளை, அவர்கள் பொலிஸாரின் கடமையைச் செய்வதற்கு இடையூறு செய்ததோடு, தப்பிச் செல்வதற்கும் முற்பட்டனர் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மிரிஹான மற்றும் கந்தளாய் பிரதேசங்களைச் சேர்ந்த 27 மற்றும் 47 வயதுடைய நபர்களாவர்.

இவர்களை இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜராக்குவதற்கு பொலிஸார் நடவடிக்கைகளை மேள்கொண்டுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்