பொலிஸார் இருவர் மீது வாள் வெட்டு; சுண்ணாகத்தில் சம்பவம்

🕔 October 23, 2016

attack-police-0111பொலிஸார் இருவர் யாழ்ப்பாணம் – சுண்ணாகம் பகுதியில் வாள் வெட்டுக்கு இலக்காகிய நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது

ஆறு பேர் கொண்ட குவினரே இந்த வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதன்போது தாக்குதலுக்குள்ளாகி காயமடைந்த பொலிஸார் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, வர்த்தக நிலைய உரிமையாளர் ஒருவர் மீதும் வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டதோடு, அவரிடமிருந்த 35,000 ரூபாய் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து கொக்குவில், சுண்ணாகம் பிரதேசப் பகுதியில் சிறப்பு பொலிஸ் அதிரடி படையினர் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.attack-police-0113 attack-police-0114

Comments

புதிது பேஸ்புக் பக்கம்