வவுணதீவில் பொலிஸார் இருவர், துப்பாக்கிச் சூட்டில் பலி

🕔 November 30, 2018

– அஹமட் –

ட்டக்களப்பு – வவுணதீவு பிரதேசத்தில் பொலிஸார் இருவரின் சடலங்கள் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளன.

வவுணதீவிலுள்ள பாதுகாப்பு காவலணில் கடமையாற்றியவர்களே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஒருவர் சிங்களவர் மற்றையவர் தமிழராவார்.

இரவு நேரக் கடமையில் ஈடுபட்டிருந்த இவர்கள் மீது அதிகாலை வேளையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என, அங்குள்ள பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவர்கள் இருவரும் வவுணதீவு பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்தவர்களாவர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்