யாழ் மாணவர்கள் மரணம் தொடர்பில் 05 பொலிஸார் கைது; பணியிலிருந்தும் இடைநீக்கம்

🕔 October 21, 2016

Arrestயாழ்ப்பாணம் பல்லைக்கழக மாணவர்களின் மரணம் தொடர்பில் –  ஐந்து பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, குறித்த பொலிஸார் ஐவரும் பணியிலிருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் செய்திப் பணிப்பாளர் ஹில்மி முகம்மத் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் – மேற்படி மாணவர்களின் மரணம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இவ் விவகாரம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் சடத்தின் பிரகாரம் முன்னெடுக்கப்படும் என்றும், குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்