யாழ் மாணவர்களை சுட்டதாகக் கூறப்படும் பொலிஸார், சம்பவ இடத்துக்கு அழைத்து வரப்பட்டு விசாரணை

🕔 October 26, 2016

police-jaffna-098யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் பலியான இடத்திற்கு சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட 05 பொலிஸாரும் இன்று புதன்கிழமை காலை அழைத்துவரப்பட்டனர். கை விலங்கிடப்பட்டு விசேட அதிரடிப் படையினரின் பாதுகாப்புடன், சிறைச்சாலை பாதுகாப்பு அதிகாரிகளினால் குறித்த பொலிஸார் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இதேவேளை, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய தடயவியல் பொலிஸார் குறித்த இடத்தை இன்று காலை ஆய்வு செய்தனர்.

அழைத்துவரப்பட்ட பொலிஸார், குறித்த இளைஞர்கள் மீது, எங்கிருந்து துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர் என்பதைக் காட்டியுள்ளனர்.

இதற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மற்றும் ஆய்வுகளில் துப்பாக்கிரவை கூடு மீட்கப்பட்டுள்ளன.

இதேவேளை மேற்படி சம்பவத்தில் ஏ.கே – 47 அல்லது அதனை ஒத்த இயந்திர துப்பாக்கி மூலம் 09 துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன், துப்பாக்கிச் சூடு பட்டு உயிரிழந்த மாணவனுக்கு துப்பாக்கி ரவை இடது பக்கமாக அல்ல வலது பக்கமாக பட்டு மார்பு பக்கத்தினால் வெளியே வந்துள்ள தாகவும் கூறப்படுகிறது.police-jaffna-095

Comments

புதிது பேஸ்புக் பக்கம்