யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மரணம்; கைதான ஐந்து பொலிஸாருக்கும், தொடர்ந்தும் விளக்க மறியல்

🕔 November 18, 2016

Remand - 01யாழ்ப்பாணத்தில் துப்பாக்சிச் சூட்டின் போது பலியானதாகக் கூறப்படும் இரண்டு பல்கலைக்கழக மாணவர்களின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்களையும், டிசம்பர் மாதம் 02 ஆம் திகதி வரை, தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேற்படி ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்களும் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டனர்.

இதன்போதே, தொடர்ந்தும் அவர்களை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

மோட்டார் சைக்கிளில் சென்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் மீது, மேற்படி ஐந்து பொலிஸாரும் கடமையில் ஈடுபட்டுக் கொண்டிந்த போது, துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், கடந்த மாதம் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்