கடை உடைத்து திருடியவருக்கு விளக்க மறியல்
– எப். முபாரக் –
கந்தளாய் பிரதேசத்தில் கடையொன்றினை உடைத்து மூன்றரை லட்சம் ரூபாய் பணத்தினை திருடிய சந்தேக நபர் ஒருவரை, இம்மாதம் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதவான் நீதிமன்ற நீதிவான் எச்.ஜி. தம்மிக்க இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டார்.
கந்தளாய் பிரதேசத்தில் கடந்த வாரம் கையடக்கத் தொலைபேசிக் கடைகள் இரண்டு, மற்றும் இலத்திரனியல் கடைகளும் உடைக்கப்பட்டன.
இங்கிருந்து மூன்றரை லட்சம் ரூபாய் பணம் மற்றும் இதர இலத்திரனியல் பொருட்கள் திருடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இக்கடையுடைப்பு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை, நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்த பொலிஸார், இன்றைய தினம் கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.