அமுக்கக் குண்டு கிண்ணியாவில் மீட்பு
– எப். முபாரக் –
அமுக்கக் குண்டொன்றினை திருகோணமலை – கிண்ணியா கடற்கரையோரத்தில் நேற்று சனிக்கிழமை மாலை கிண்ணியா பொலிஸார் மீட்டனர்.
இந்தக் குண்டு கடலலையில் அடித்து வரப்பட்டதாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
கிண்ணியா பழைய வைத்தியசாலைக்கு முன்னால் கடலில் குளிக்கச்சென்ற இளைஞர்கள், பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து இக்குண்டு மீட்கப்பட்டதாக கிண்ணியா பொலிஸர் கூறினார்.
குறித்த குண்டை செயலிழக்க வைப்பதற்காக திருகோணமலை நீதிமன்றத்தில் அனுமதியைப் பெறவுள்ளதாகவும், அனுமதி கிடைக்கவுடன் அதனை ரானுவத்தினரின் உதவியுடன் செயலிழக்கச் செய்யவுள்ளதாகவும கிண்ணியா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.