மஸ்கெலியாவில் மண் சரிவு; 200 பேர் இடம்பெயர்வு

🕔 May 28, 2016

Maskeliya - 086
– க. கிஷாந்தன் –

ஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காட்மோர் தோட்டத்தில் இன்று சனிக்கிழமை காலை ஏற்பட்ட மண்சரிவினால் 200 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

காட்மோர் தோட்டம் புரோக்மோர் பிரிவில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

குடியிருப்பு பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதுடன் குடியிருப்பு சுவர்களிலும் வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

மண்சரிவு ஏற்பட்டுள்ள பகுதியிலுள்ள 41 குடும்பங்களை சேர்ந்த 200 பேரை உடனடியாக வெளியேற்றி, தோட்ட ஆலயம் மற்றும் சிறுவர் நிலையத்தில் தற்காலிகமாக தங்கவைத்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்