மகன் சம்பந்தப்பட்ட வீடியோ காட்சிகளை, பொலிஸாரிடமிருந்து ஜனாதிபதி பெற்றுக் கொண்டதாக விமர்சனம்

🕔 October 16, 2016

maithiridaham-011னாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது மகனைக் காப்பாற்றுவதற்காக சட்டத்தினைச் துச்சமாக மதித்து செயற்பட்டுள்ளார் என்று கொழும்பு ரெலிகிரப் இணையத்தளம் விமர்சித்துள்ளது.

ஜனாதிபதியின் மகன் தஹம் சிறிசேன, அண்மையில் கிலிக் இரவுநேர களியாட்ட விடுதியில் தவறான செயலில் ஈடுபட்டதாகவும், தனது பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் இணைந்து அங்கிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்களை தாக்கியதோடு, விடுதியின் சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாகவும் கூறப்படுகிறது.

தனது மகன் மற்றும் அவருக்குப் பாதுகாப்பு வழங்கிய ஜனாதிபதி பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், குறித்த களியாட்ட விடுதி தாக்குதலில்  ஈடுபட்டபோது பதிவான சி.சி.ரி.வி. வீடியோ காட்சிகளை, தனக்குக் காண்பிக்குமாறு பொலிஸாருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டதாகவும் கொழும்பு ரெலிகிரப் சுட்டிக்காட்டியுள்ளது.

ஜனாதிபதியின் மேற்படி செயற்பாடு சட்டவிரோதமானது என்றும், நாட்டின் தலைவர் எனும் வகையில் தனது மகன் விடயத்தில் ஜனாதிபதி இவ்வாறு நடந்திருக்கக் கூடாது என்றும் அந்த இணையத்தளம் தெரிவித்துள்ளது.

மேற்படி களியாட்ட விடுதி தாக்குதலில் தஹம் சிறிசேன ஈடுபட்டுள்ளார் என்பதற்கான ஆதாரமாக உள்ள சி.சி.ரி.வி. வீடியோ காட்சிகளை, தனக்கு காண்பிக்குமாறு பொலிஸாருக்கு ஜனாதிபதி உத்தரவிட்டதன் மூலம், சட்டத்தை புறக்கணித்துள்ளதோடு, சட்டத்தை மீறியும் செயற்பட்டுள்ளார் என்றும் கொழும்பு ரெலிகிரப் குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், மேற்படி தாக்குதல் சம்பவம் நடைபெற்று ஒரு வார காலம் கடந்துள்ள நிலையிலும், அச் சம்பவம் தொடர்பில் இதுவரை தஹம் சிறிசேனவிடம் பொலிஸார் ஒரு வாக்குமூலத்தைக் கூட பதிவு செய்யவில்லை. ஆனால், இதுவே வேறு யாருடைய புதல்வர்களாகவும் இருந்திருந்தால், சந்தேக நபர்களிடம் பொலிஸார் வாக்கு மூலங்களையாவது பதிவு செய்திருப்பார்கள் எனவும் அந்த இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், தஹம் சிறிசேனவுடன் சம்பவ தினம் சென்றிருந்த ஜனாதிபதி பாதுகாப்பு உத்தியோகத்தர்களிடமும், இதுவரை வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், ஒக்டோபர் 08 ஆம் திகதி, கிலிக் இரவுநேர களியாட்ட விடுதி தாக்கப்பட்ட போது பதிவான சி.சி.ரி.வி. வீடியோ காட்சிகளை, ஜனாதிபதியிடம் பொலிஸார் வழங்கி விட்டதாகவும் அந்த இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்படி, ஜனாதிபதியிடம் 04 சி.சி.ரி.வி. வீடியோ காட்சிகளை பொலிஸார் வழங்கியுள்ளனர் எனத் தெரிவித்துள்ள கொழும்பு ரெலிகிரப், அதன் விபரங்களையும் வெளியிட்டுள்ளது.cctv-daham-002

Comments

புதிது பேஸ்புக் பக்கம்