Back to homepage

Tag "இஸ்ரேல்"

இஸ்ரேல் செல்லும் இலங்கை தொழிலாளர்களுக்கு ராணுவப் பயிற்சி: மு.கா தலைவர் ஹக்கீம் நாடாளுமன்றில் குற்றச்சாட்டு

இஸ்ரேல் செல்லும் இலங்கை தொழிலாளர்களுக்கு ராணுவப் பயிற்சி: மு.கா தலைவர் ஹக்கீம் நாடாளுமன்றில் குற்றச்சாட்டு 0

🕔25.Nov 2023

இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டுள்ள இலங்கை தொழிலாளர்களுக்கு ராணுவப் பயிற்சி வழங்கப்பட உள்ளதாக – முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் இன்று (25) நாடாளுமன்றத்தில் குற்றம் சுமத்தியுள்ளார். “காஸா பகுதியில் மோதல் வெடித்ததில் இருந்து – இஸ்ரேலால் கையகப்படுத்தப்பட்ட பகுதிகளில் இலங்கை புலம்பெயர்ந்தோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்” என்றும் அவர குறிப்பிட்டார். எனினும், இதற்கு பதிலளித்த தொழில் அமைச்சர்

மேலும்...
இஸ்ரேலியர் 13 பேர் உட்பட, 24 பணயக் கைதிகளை ஹமாஸ் விடுவித்தது

இஸ்ரேலியர் 13 பேர் உட்பட, 24 பணயக் கைதிகளை ஹமாஸ் விடுவித்தது 0

🕔24.Nov 2023

காஸாவில் நான்கு நாட்கள் போர் இடைநிறுத்தம் அமுலுக்கு வந்துள்ள நிலையில், 13 இஸ்ரேலிய பொதுமக்கள் உட்பட 24 பணயக் கைதிகளை ஹமாஸ் விடுவித்துள்ளதாக, யுத்த நிறுத்தத்துக்கு மத்தியஸ்தம் வகிக்கும் கட்டார் நாட்டின் வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது. விடுவிக்கப்பட்டுள்ள இஸ்ரேலியர்களில் இரட்டை பிரஜாவுரிமை உள்ளோரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் தாய்லாந்து நாட்டவர் 10 பேரும், பிலிப்பைன்ஸ் நாட்டவர்

மேலும்...
போர் நிறுத்தம் அமுலாகவுள்ள நிலையில், காஸாவின் இழப்புகள் தொடர்பில் அறிவிப்பு

போர் நிறுத்தம் அமுலாகவுள்ள நிலையில், காஸாவின் இழப்புகள் தொடர்பில் அறிவிப்பு 0

🕔24.Nov 2023

காஸாவில் நான்கு நாள் போர் நிறுத்தம் இன்று (24) காலை 7.00 மணிக்கு அமுலுக்கு வரவுள்ள நிலையில், அங்கு ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் மற்றும் அழிவுகள் தொடர்பில் காஸா அரசாங்க ஊடக அலுவலகம் தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி 14,854 க்கும் அதிகமானோர் காஸாவில் உயிரிழந்துள்ள நிலையில், 3600 பேர் காயமடைந்துள்ளனர். இந்த நிலையில் 15 லட்சம் போர்

மேலும்...
ஹமாஸ் – இஸ்ரேல் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம்; பலஸ்தீன் தரப்பில் விடுதலையாகும் ஷோரூக் சலா இப்ராஹிம் துவாயத்: யார் இவர்? ஏன் கைதானார்?

ஹமாஸ் – இஸ்ரேல் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம்; பலஸ்தீன் தரப்பில் விடுதலையாகும் ஷோரூக் சலா இப்ராஹிம் துவாயத்: யார் இவர்? ஏன் கைதானார்? 0

🕔24.Nov 2023

ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் காரணமாக, விடுவிக்கப்படவுள்ள பலஸ்தீன பெண் கைதிகளில் – ஷோரூக் சலா இப்ராஹிம் துவாயத் என்பவரும் ஒருவராவார். ஜெருசலேமை வசிப்பிடமாகக் கொண்ட ஷோரூக், 2015ஆம் ஆண்டு இஸ்ரேலிய படையினரால் கைது செய்யப்பட்டார். அவர் அல்-அக்ஸா பள்ளிவாசலுக்குச் சென்று கொண்டிருந்த வழியில், அவருடைய ஹிஜாபை அகற்றுவதற்கு சட்டவிரோத

மேலும்...
ஹமாஸ் – இஸ்ரேல்; நான்கு நாள் போர் நிறுத்தம் நாளை காலை தொடங்குகிறது: ஆனாலும் தாக்குதல் தீவிரம்

ஹமாஸ் – இஸ்ரேல்; நான்கு நாள் போர் நிறுத்தம் நாளை காலை தொடங்குகிறது: ஆனாலும் தாக்குதல் தீவிரம் 0

🕔23.Nov 2023

ஹமாஸ் – இஸ்ரேல் தரப்புகளிடையெ செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்துக்கு இணங்க, நான்கு நாள் போர்நிறுத்தம் நாளை வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்கவுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் படி கைதிகளில் முதல் 13 பொதுமக்கள் சிறைபிடிக்கப்பட்டவர்கள் மாலை 4 மணிக்கு விடுவிக்கப்படுவார்கள் என்று கட்டார் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய சிறைகளில் உள்ள பலஸ்தீன்

மேலும்...
போர் இடைநிறுத்தம் எப்போது எனத் தெரியவில்லை; வெள்ளிக்கிழமைக்கு முன்னர் கைதிகள் விடுதலை இல்லை: இஸ்ரேல் அறிவிப்பு

போர் இடைநிறுத்தம் எப்போது எனத் தெரியவில்லை; வெள்ளிக்கிழமைக்கு முன்னர் கைதிகள் விடுதலை இல்லை: இஸ்ரேல் அறிவிப்பு 0

🕔23.Nov 2023

போர் இடைநிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக – காஸா கைதிகள் எவரும் வெள்ளிக்கிழமைக்கு முன் விடுவிக்கப்பட மாட்டார்கள் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இது இவ்வாறிருக்க பலஸ்தீன் பகுதி முழுவதும் கடுமையான வான் தாக்குதல்களும் கடுமையான ஷெல் தாக்குதல்களும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் உடன்பட்ட நான்கு நாள் போர் இடைநிறுத்தம் எப்போது தொடங்கும்

மேலும்...
போர் இடைநிறுத்தத்துக்கு இஸ்ரேல் – ஹமாஸ் உடன்பாடு: கட்டார் மத்தியஸ்தம்

போர் இடைநிறுத்தத்துக்கு இஸ்ரேல் – ஹமாஸ் உடன்பாடு: கட்டார் மத்தியஸ்தம் 0

🕔22.Nov 2023

காஸாவில் நான்கு நாள் போர்நிறுத்தம் மேற்கொள்வதற்கும் இஸ்ரேலில் சிறைபிடிக்கப்பட்ட 50 பேரை விடுவிப்பதற்கும் – இஸ்ரேலும் ஹமாஸும் உடன்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தத்துக்கு கட்டார் மத்தியஸ்தம் வகிக்துள்ளது. இந்த ஒப்பந்தத்துக்கிணங்க இஸ்ரேல் சிறையில் உள்ள 150 பலஸ்தீன் பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுவிக்கப்படுவார்கள். ஒப்பந்தம் என்பது போர் நிறுத்தப்படும் என்று அர்த்தமல்ல என்று பிரதமர் நெதன்யாஹு கூறியுள்ளார்.

மேலும்...
விடுவிக்கப்பட்ட இஸ்ரேலிய பணயக்கைதிக்கு, ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்து கொடுத்தவர், பதவி விலகினார்

விடுவிக்கப்பட்ட இஸ்ரேலிய பணயக்கைதிக்கு, ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்து கொடுத்தவர், பதவி விலகினார் 0

🕔21.Nov 2023

இஸ்ரேல் தலைநகர் – ‘டெல் அவிவ்’இல் அமைந்துள்ள இச்சிலோவ் வைத்திய நிலையத்தின் செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து – அவி ஷோஷன் விலகியுள்ளார் என்று ‘தி டைம்ஸ் ஒஃப் இஸ்ரேல்’ தெரிவித்துள்ளது. கடந்த ஒக்டோபர் 07ஆம் திகதி ஹமாஸ் அமைப்பினரால் சிறைப்பிடிக்கப்பட்ட 85 வயதான யோச்செவ்ட் லிஃப்ஷிட்ஸ் எனும் பெண், காஸாவில் 16 நாட்கள் தடுத்து

மேலும்...
அல் ஷிஃபா வைத்தியசாலையிலிருந்து வெளியேற ஒரு மணி  நேர காலக்கெடு; வீதியெங்கும் இறந்த உடல்கள்: அல் ஜசீராவிடம் உள்ளே இருப்பவர் தெரிவிப்பு

அல் ஷிஃபா வைத்தியசாலையிலிருந்து வெளியேற ஒரு மணி நேர காலக்கெடு; வீதியெங்கும் இறந்த உடல்கள்: அல் ஜசீராவிடம் உள்ளே இருப்பவர் தெரிவிப்பு 0

🕔18.Nov 2023

காஸாவிலுள்ள அல் – ஷிஃபா வைத்தியசாலையிலிருந்து அங்குள்ளவர்கள் ஒரு மணி நேரத்துக்குள் வெளியேறுமாறு இஸ்ரேலிய ராணுவம் அவகாசம் வழங்கியுள்ளதாக அங்குள்ள வைத்தியர் ஒருவர் அல் ஜசீராவிடம் தெரிவித்துள்ளார். ஆயிரக்கணக்கான நோயாளிகள், வைத்தியர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் சிக்கியுள்ள காஸா நகரிலுள்ள அல் – ஷிஃபா வைத்தியசாலையை இஸ்ரேலியப் படைகள் சூறையாடியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நிலைமை குறித்

மேலும்...
1967இல் கிழக்கு ஜெருசலேமை தலைமையகமாக கொண்டிருந்த பலஸ்தீன அரசை மீள நிறுவ வேண்டும்: அரபு லீக் உச்சி மாநாட்டில் சஊதி பட்டத்து இளவரசர் தெரிவிப்பு

1967இல் கிழக்கு ஜெருசலேமை தலைமையகமாக கொண்டிருந்த பலஸ்தீன அரசை மீள நிறுவ வேண்டும்: அரபு லீக் உச்சி மாநாட்டில் சஊதி பட்டத்து இளவரசர் தெரிவிப்பு 0

🕔11.Nov 2023

காஸாவில் ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், சிறைபிடிக்கப்பட்டவர்கள் மற்றும் கைதிகள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்றும் சஊதி அரேபியாவின் பட்டத்து இளவரசில் முகம்மது பின் சல்மான் அழைப்பு விடுத்துள்ளார். 57 நாடுகள் அங்கம் வகிக்கும் ‘கூட்டு அரபு லீக் மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு’ உச்சிமாநாடு, இன்று சஊதி அரேபியாவின் தலைநகர் றியாத்தில்

மேலும்...
காஸாவிலிருந்து மக்களை வெளியேற்றுவதற்காகவே, வைத்தியசாலைகள் மீது தாக்குதல்: செம்பிறைச் சங்கத் தலைவர் தெரிவிப்பு

காஸாவிலிருந்து மக்களை வெளியேற்றுவதற்காகவே, வைத்தியசாலைகள் மீது தாக்குதல்: செம்பிறைச் சங்கத் தலைவர் தெரிவிப்பு 0

🕔11.Nov 2023

ஆயிரக்கணக்கான நோயாளிகள் மற்றும் இடம்பெயர்ந்த பலஸ்தீனியர்கள் தஞ்சமடைந்துள்ள காஸா நகரின் அல்-ஷிஃபா வைத்தியசாலையின் முன் வாயிலை இஸ்ரேலியப் படைகள் தாக்கியுள்ளன. இந்த நிலையில், காஸாவிலிருந்து பொதுமக்களை வெளியேற்றுவதற்காக காஸா வைத்தியசாலைகள் “வேண்டுமென்றே குறிவைக்கப்படுகின்றன” என்று, பலஸ்தீன் செம்பிறை (Red Crescent) சங்கத் தலைவர் – ஐ.நாடுகள் பாதுகாப்புச் சபையிடம் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு நாட்களில் காஸாவில்

மேலும்...
தினமும் 04 மணி நேரம் தாக்குதல் இடைநிறுத்தம்: இஸ்ரேல் இணங்கியுள்ளதாக அமெரிக்கா அறிவிப்பு

தினமும் 04 மணி நேரம் தாக்குதல் இடைநிறுத்தம்: இஸ்ரேல் இணங்கியுள்ளதாக அமெரிக்கா அறிவிப்பு 0

🕔10.Nov 2023

வடக்கு காஸாவிலிருந்து மக்கள் வெளியேற அனுமதிக்கும் வகையில், தினமும் நான்கு மணி நேர தாக்குதல் இடைநிறுத்தங்களைத் தொடங்க இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. முதல் மனிதாபிமான தாக்குதல் இடைநிறுத்தம் – நேற்று வியாழக்கிழமை அறிவிக்கப்படும் என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஜோன் கிர்பி (John Kirby) கூறியிருந்தார். ஒவ்வொரு நான்கு

மேலும்...
ஹமாஸ் தாக்குதலில் பலியானோரின் பெயர்ப்பட்டியலை இஸ்ரேல் வெளியிட்டது: பெரும்பாலானோர் ராணுவத்தினர்

ஹமாஸ் தாக்குதலில் பலியானோரின் பெயர்ப்பட்டியலை இஸ்ரேல் வெளியிட்டது: பெரும்பாலானோர் ராணுவத்தினர் 0

🕔8.Nov 2023

இஸ்ரேலில் கடந்த ஒக்டோபர் 07ஆம் திகதி ஹமாஸ் அமைப்பினரால் கொல்லப்பட்டதாகக் கூறப்படுவோரின் உத்தியோகபூர்வமான பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் 1400க்கும் பெயர்கள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை இஸ்ரேலிய படையினரின் பெயர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தாக்குதலில் பலியானவர்களில் சிலர் – இன்னும் அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இவ்வாறிருக்க, ஒக்டோபர் 07ஆம் திகதியிலிருந்து இன்று

மேலும்...
காஸா வைத்தியசாலைகள் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 15 மரணித்த உடல்களைப் பெறுவதாக தகவல்

காஸா வைத்தியசாலைகள் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 15 மரணித்த உடல்களைப் பெறுவதாக தகவல் 0

🕔7.Nov 2023

காஸாவிலுள்ள வைத்தியசாலைகள் சராசரியாக ஒவ்வொரு நிமிடமும் ஒரு காயமடைந்த நபரையும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 15 மரணித்த உடல்களையும் பெறுகின்றன என்று, காஸா அரசாங்க ஊடக அலுவலகம் அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளது. சராசரியாக ஒரு மணி நேரத்திற்கு ஆறு குழந்தைகளும், ஐந்து பெண்களும் கொல்லப்படுகின்றனர் அங்கு கொல்லப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரேலிய குண்டுவீச்சு மற்றும்

மேலும்...
காஸா ‘பலி’ எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது: இடிபாடுகளுக்குள் 02 ஆயிரம் பேர் சிக்கியுள்ளதாகவும் அச்சம்

காஸா ‘பலி’ எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது: இடிபாடுகளுக்குள் 02 ஆயிரம் பேர் சிக்கியுள்ளதாகவும் அச்சம் 0

🕔6.Nov 2023

காஸா பகுதியில் 31 நாட்கள் இடைவிடாது நடந்து வரும் இஸ்ரேலிய தாக்குதல்களில் 10,000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் என, பாலஸ்தீனிய சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். காஸா சுகாதார அமைச்சு இன்று திங்கட்கிழமை விடுத்துள்ள ஒரு அறிக்கையில், குறைந்தது 10,022 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 4,104 குழந்தைகளாவர். இதேவேளை பலர் இன்னும் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ளனர் என்றும்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்