ஹமாஸ் தாக்குதலில் பலியானோரின் பெயர்ப்பட்டியலை இஸ்ரேல் வெளியிட்டது: பெரும்பாலானோர் ராணுவத்தினர்

🕔 November 8, 2023

ஸ்ரேலில் கடந்த ஒக்டோபர் 07ஆம் திகதி ஹமாஸ் அமைப்பினரால் கொல்லப்பட்டதாகக் கூறப்படுவோரின் உத்தியோகபூர்வமான பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் 1400க்கும் பெயர்கள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை இஸ்ரேலிய படையினரின் பெயர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தாக்குதலில் பலியானவர்களில் சிலர் – இன்னும் அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க, ஒக்டோபர் 07ஆம் திகதியிலிருந்து இன்று (08) வரை காஸாவில் குறைந்தது 10,328 பலஸ்தீனியர்கள் – இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments