தினமும் 04 மணி நேரம் தாக்குதல் இடைநிறுத்தம்: இஸ்ரேல் இணங்கியுள்ளதாக அமெரிக்கா அறிவிப்பு

🕔 November 10, 2023

டக்கு காஸாவிலிருந்து மக்கள் வெளியேற அனுமதிக்கும் வகையில், தினமும் நான்கு மணி நேர தாக்குதல் இடைநிறுத்தங்களைத் தொடங்க இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

முதல் மனிதாபிமான தாக்குதல் இடைநிறுத்தம் – நேற்று வியாழக்கிழமை அறிவிக்கப்படும் என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஜோன் கிர்பி (John Kirby) கூறியிருந்தார்.

ஒவ்வொரு நான்கு மணி நேர தாக்குதல் நிறுத்தத்தினையும் – குறைந்தது மூன்று மணி நேரத்துக்கு முன்னதாக அறிவிக்க இஸ்ரேல் உறுதியளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“குறித்த இடைநிறுத்தங்களின் போது – அந்த பகுதிகளில் ராணுவ நடவடிக்கைகள் எவையும் இருக்காது என்றும், இந்த செயல்முறை இன்று (09) தொடங்குகிறது என்றும் இஸ்ரேலியர்கள் எங்களுக்குத் தெரிவித்தனர்” என கிர்பி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் போர்நிறுத்தம் இருக்காது என்று கிர்பி தெளிவுபடுத்தியுள்ளார்.

இதற்கிடையில், எந்த போர்நிறுத்தத்திற்கும் தாம் உடன்படவில்லை என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஆனால் மனிதாபிமான உதவியை அனுமதிக்க சுருக்கமான, உள்ளூர்மயமாக்கப்பட்ட இடைநிறுத்தங்களை தொடர்ந்து தாம் அனுமதிக்கவுள்ளதாகவும் இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்