காஸாவிலிருந்து மக்களை வெளியேற்றுவதற்காகவே, வைத்தியசாலைகள் மீது தாக்குதல்: செம்பிறைச் சங்கத் தலைவர் தெரிவிப்பு

🕔 November 11, 2023

யிரக்கணக்கான நோயாளிகள் மற்றும் இடம்பெயர்ந்த பலஸ்தீனியர்கள் தஞ்சமடைந்துள்ள காஸா நகரின் அல்-ஷிஃபா வைத்தியசாலையின் முன் வாயிலை இஸ்ரேலியப் படைகள் தாக்கியுள்ளன.

இந்த நிலையில், காஸாவிலிருந்து பொதுமக்களை வெளியேற்றுவதற்காக காஸா வைத்தியசாலைகள் “வேண்டுமென்றே குறிவைக்கப்படுகின்றன” என்று, பலஸ்தீன் செம்பிறை (Red Crescent) சங்கத் தலைவர் – ஐ.நாடுகள் பாதுகாப்புச் சபையிடம் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு நாட்களில் காஸாவில் 01 லட்சம் பலஸ்தீனியர்கள் தெற்கு நோக்கி நகர்ந்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. பல பலஸ்தீனியர்கள் தொடர்ந்து சண்டைக்கு மத்தியில் தாங்கள் சிக்கியிருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

ஒக்டோபர் 07 முதல் காஸா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில், குறைந்தது 11,078 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலில், ஒரு திருத்தத்துக்குப் பிறகு, இறப்பு எண்ணிக்கை இப்போது 1,200 க்கும் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னர் இஸ்ரேலில் 1400க்கும் அதிகமானோர் பலியானதாக கூறப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்