காஸா வைத்தியசாலைகள் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 15 மரணித்த உடல்களைப் பெறுவதாக தகவல்

🕔 November 7, 2023

காஸாவிலுள்ள வைத்தியசாலைகள் சராசரியாக ஒவ்வொரு நிமிடமும் ஒரு காயமடைந்த நபரையும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 15 மரணித்த உடல்களையும் பெறுகின்றன என்று, காஸா அரசாங்க ஊடக அலுவலகம் அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளது.

சராசரியாக ஒரு மணி நேரத்திற்கு ஆறு குழந்தைகளும், ஐந்து பெண்களும் கொல்லப்படுகின்றனர் அங்கு கொல்லப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய குண்டுவீச்சு மற்றும் தாக்குதல்களால் காஸாவின் 70 சதவீத மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வலுக்கட்டாயமாக இடம்பெயர்ந்துள்ளனர்.

காஸா தாக்குதலுக்காக சுமார் 30,000 டொன் வெடிபொருட்களை – இஸ்ரேல் பயன்படுத்தியுள்ளதாகவும், அது- சராசரியாக ஒரு சதுர கிலோமீட்டருக்கு 82 டொன் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அங்குள்ள வைத்தியசாலைகளில் அரைவாசி எண்ணிக்கையிலானவையும், 62 சதவீத ஆரம்ப சுகாதார நிலையங்களும் செயல்படவில்லை.

50 சதவீத வீடுகள் குண்டுவீச்சு மற்றும் சோதனைகளால் சேதமடைந்துள்ள அதேவேளை 10 சதவீதம் வாழத் தகுதியற்றவையாக மாறியுள்ளன.

காஸாவிலுள்ள மூன்றில் ஒரு பங்கு பாடசாலைகள் சேதமடைந்துள்ளன என்றும், சுமார் 9 சதவீத பாடசாலைகள் இயங்கவில்லை எனவும் மேற்படி அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

காஸா பகுதியில் உள்ள பள்ளிவாசல்களில் 14 சதவீதம் சேதமடைந்துள்ளதுடன், 5 சதவீதமானவை முழுமையாக அழிக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்