Back to homepage

Tag "ஆர்ப்பாட்டம்"

ஜனாபதி வவுனியாவுக்கு சென்றிருந்த வேளை ஆர்ப்பாட்டம்: பொலிஸாருடனும் முறுகல்

ஜனாபதி வவுனியாவுக்கு சென்றிருந்த வேளை ஆர்ப்பாட்டம்: பொலிஸாருடனும் முறுகல் 0

🕔11.Feb 2022

வவுனியா பல்கலைக்கழகத்தைத் திறந்து வைப்பதற்காக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்றைய தினம் (11) அங்கு சென்றிருந்தபோது, காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். இதன்போது பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது. நாட்டின் 17ஆவது பல்கலைக்கழகமாக வவுனியா பல்கலைக்கழகத்தை திறந்து வைப்பதற்காக ஜனாதிபதி அங்கு சென்றிருந்தபோது அங்கு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டக்காரர்கள் பல்கலைக்கழகத்துக்குள்

மேலும்...
நீண்ட வரிசைகளின் யுகத்தை அரசாங்கம் உருவாக்கியுள்ளது; சமூகத்தில் விரக்தி ஏற்பட்டுள்ளது: ஆர்ப்பாட்டப் பேரணில் சஜித் தெரிவிப்பு

நீண்ட வரிசைகளின் யுகத்தை அரசாங்கம் உருவாக்கியுள்ளது; சமூகத்தில் விரக்தி ஏற்பட்டுள்ளது: ஆர்ப்பாட்டப் பேரணில் சஜித் தெரிவிப்பு 0

🕔16.Nov 2021

தற்போதைய அரசாங்கம் நீண்ட வரிசைகளின் யுகத்தை உருவாக்கியுள்ளது என்றும், சமூகத்தில் விரக்தி ஏற்பட்டுள்ளது எனவும் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். “டட்லிசேனநாயக்க ஆரம்பித்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை வரலாற்றில் முதல் தடவையாக இந்த அரசாங்கம் மூடியுள்ளது” எனவும் அவர் கூறியுள்ளார். அரசாங்கத்தக்கு எதிராக கொழும்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்து கொண்டு பேசிய போதே

மேலும்...
உரம் வேண்டி ஆர்ப்பாட்டம்: தேங்காயும் உடைப்பு

உரம் வேண்டி ஆர்ப்பாட்டம்: தேங்காயும் உடைப்பு 0

🕔24.Oct 2021

– க. கிஷாந்தன் – விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான உரத்தை வழங்குமாறு வலியுறுத்தி கொத்மலை பகுதி விவசாயிகள் இன்று (24) போராட்டத்தில் ஈடுப்பட்டனர். கொத்மலை வயல் பகுதியில் பதாதைகளை ஏந்தி, கோஷங்களை எழுப்பியவாறு இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அகில இலங்கை விவசாய சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், உர தட்டுப்பாட்டால் தாம்

மேலும்...
தோட்ட நிர்வாகத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்: அரசியல் தலைமைகளைத் தலையிடுமாறும் கோரிக்கை

தோட்ட நிர்வாகத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்: அரசியல் தலைமைகளைத் தலையிடுமாறும் கோரிக்கை 0

🕔28.Sep 2021

– க. கிஷாந்தன் – மஸ்கெலியா டீசைட் தோட்ட நிர்வாகத்துக்கு எதிராக அந்த தோட்டத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று (28) ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மஸ்கெலியா டீசைட் தோட்ட நிர்வாகம் தேயிலை தோட்டங்களை காடுகளாக்கி சுத்தம் செய்ய நடவடிக்கைகளை எடுக்காமல், 20 கிலோவுக்கு அதிகமான தேயிலை கொழுந்தினை கொய்து தரும்படி வழியுறுத்துவதனால் ஏற்பட்ட முறுகல் நிலையை முன்னிறுத்தி

மேலும்...
கல்முனை உப பிரதேச செயலாளர் எனது அறிவுறுத்தல்களை கேட்பதில்லை; அரசாங்க அதிபருக்கும் முறையிட்டுள்ளேன்: பிரதேச செயலாளர் லியாகத் அலி

கல்முனை உப பிரதேச செயலாளர் எனது அறிவுறுத்தல்களை கேட்பதில்லை; அரசாங்க அதிபருக்கும் முறையிட்டுள்ளேன்: பிரதேச செயலாளர் லியாகத் அலி 0

🕔5.Jul 2021

– நூருல் ஹுதா உமர் – தன்னுடைய அறிவுறுத்தல்களை கல்முனை உப பிரதேச செயலளர் ரி. அதிசயராஜ் கேட்பதில்லை என்றும், இது தொடர்பில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருக்கு தான் முறையிட்டுள்ளதாகவும் கல்முனை பிரதேச செயலாளர் ஜே. லியாகத் அலி தெரிவித்தார். கல்முனை உப பிரதேச செயலகம் முன்பாக இன்று பகல் கிராம சேவகர்கள் நடத்திய

மேலும்...
தேவைகளை நிறைவேற்று: அரசிடம் கோரிக்கை முன்வைத்து, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் பணியாற்றும் தாதியர்கள் ஆர்ப்பாட்டம்

தேவைகளை நிறைவேற்று: அரசிடம் கோரிக்கை முன்வைத்து, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் பணியாற்றும் தாதியர்கள் ஆர்ப்பாட்டம் 0

🕔3.Jun 2021

– பைஷல் இஸ்மாயில் – கொவிட் தொற்றுடனான போரில் முன்னரங்கில் பணியாற்றும் தாதியர்களுக்கான வசதிகளை செய்து தருமாறு அரசிடம் கோரிக்கை விடுத்து, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதி உத்தியோகத்தர்கள் இன்று வியாழக்கிழமை வைத்தியசாலையின் முற்றலில் சுலோக அட்டைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரச தாதி உத்தியோகத்தர் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  கொவிட்

மேலும்...
றிஷாட் பதியுதீனை விடுவிக்குமாறு வலியுறுத்தி கொழும்பில் மக்கள் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்; ராஜித, முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்டோரும் பங்கேற்பு

றிஷாட் பதியுதீனை விடுவிக்குமாறு வலியுறுத்தி கொழும்பில் மக்கள் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்; ராஜித, முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்டோரும் பங்கேற்பு 0

🕔30.Apr 2021

மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீனை தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைத்து, அரசியல் நாடகத்தை, அரங்கேற்றிக்கொண்டிருக்காமல், அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்தி கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரும் மேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான பாயிஸின் ஏற்பாட்டில் கொழும்பு – தெவட்டகஹ

மேலும்...
றிசாட் பதியுதீன் கைதுக்கு எதிராக மன்னாரில் இன்று ஆர்ப்பாட்டம்

றிசாட் பதியுதீன் கைதுக்கு எதிராக மன்னாரில் இன்று ஆர்ப்பாட்டம் 0

🕔29.Apr 2021

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீனின் கைதுக்கு எதிராகவும், அவரை விடுதலை செய்யக் கோரியும், இரண்டாவது நாளாக இன்று வியாழக்கிழமை மன்னாரில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. சமூக இடைவெளிகளை பின்பற்றி, முகக் கவசம் அணிந்து, சுகாதார வழிகாட்டலுக்கு அமைவாக, இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த, ஆர்ப்பாட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மன்னார் பிரதேச சபை தவிசாளர்

மேலும்...
பிராயச்சித்தம் தேட முடியாத அநியாயத்தை நிறுத்துங்கள்: ஜனாஸா எரிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு, றிசாட் கோரிக்கை

பிராயச்சித்தம் தேட முடியாத அநியாயத்தை நிறுத்துங்கள்: ஜனாஸா எரிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு, றிசாட் கோரிக்கை 0

🕔23.Feb 2021

கொவிட் தொற்று காரணமாக உயிரிழப்போரின் சடலங்களை பலாத்காரமாக தகனம் செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று செவ்வாய்கிழமை பிற்பகல் கொழும்பு – காலிமுகத் திடலில் மாபெரும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. பாகிஸ்தான் பிரதமர் இலங்கைக்கு வருகை தருவதற்கு சற்று நேரத்துக்கு முன்னர் இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது. மேற்படி விடயத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டே,

மேலும்...
ரஞ்சன் ராமநாயக்க தொடர்பில், எதிரணி உறுப்பினர்கள் நாடாளுமன்றில் ஆர்ப்பாட்டம்

ரஞ்சன் ராமநாயக்க தொடர்பில், எதிரணி உறுப்பினர்கள் நாடாளுமன்றில் ஆர்ப்பாட்டம் 0

🕔23.Feb 2021

சிறை வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தொடர்பில் இன்று செவ்வாய்கிழமை எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையில் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். ரஞ்சன் ராமநாயக்கவை சபை அமர்வில் கலந்து கொள்ள அனுமதிக்குமாறு சபாநாயகர் அறிவுறத்தல் வழங்க வேண்டுமெனக் கோரி, எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு, இன்று நாடாளுமன்ற சபை அமர்வின் இடையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேவேளை எதிர்க்கட்சித்

மேலும்...
கொரோனாவால் மரணிப்பவர்களை அடக்கம் செய்யக் கூடாது எனத் தெரிவித்து பிக்குகள் ஆர்ப்பாட்டம்

கொரோனாவால் மரணிப்பவர்களை அடக்கம் செய்யக் கூடாது எனத் தெரிவித்து பிக்குகள் ஆர்ப்பாட்டம் 0

🕔28.Dec 2020

கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான நிலையில் மரணித்தவர்களை அடக்கம் செய்யக் கூடாது எனத் தெரிவித்து, பௌத்த பிக்குகள் இன்று ஜனாதிபதி செயலகம் அருகே ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். இதன்போது அங்கு வருகை தந்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சியிடம், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிக்குகள் மகஜர் ஒன்றினையும் கையளித்தனர். சிங்கள ராவய, ஜாதிகா சன்விதான சம்மேளனய, ஜாதிகா சன்விதான

மேலும்...
பல்கலைக்கழக வெட்டுப் புள்ளியில் மாணவர்களுக்கு அநீதி: பாடசாலைகளை பாதுகாக்கும் இயக்கம் ஆர்ப்பாட்டம்

பல்கலைக்கழக வெட்டுப் புள்ளியில் மாணவர்களுக்கு அநீதி: பாடசாலைகளை பாதுகாக்கும் இயக்கம் ஆர்ப்பாட்டம் 0

🕔24.Nov 2020

– க. கிஷாந்தன் – பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்வதற்கான வெட்டுப் புள்ளிகள் அண்மையில் வெளியாகியுள்ள நிலையில், இதன் மூலம் மாணவர்களுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக பாடசாலைகளை பாதுகாக்கும் மக்கள் இயக்கத்தின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் ராமராஜ் தெரிவித்துள்ளார். வெட்டுப் புள்ளிகளை நிரணயிக்கின்ற போது, உரிய நடைமுறை கடைபிடிக்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி ஆர்ப்பாட்டம் ஒன்றை, பாடசாலைகளை பாதுகாக்கும்

மேலும்...
ஆசிரிய உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்; நிரந்தர நியமனம், கொடுப்பனவு நிலுவைகளை வழங்குமாறு கோரிக்கை

ஆசிரிய உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்; நிரந்தர நியமனம், கொடுப்பனவு நிலுவைகளை வழங்குமாறு கோரிக்கை 0

🕔27.Aug 2020

– க. கிஷாந்தன் – பெருந்தோட்ட உதவி ஆசிரியர்களாக 2015 ஆம் ஆண்டு நியமனம் பெற்ற சுமார் 600 ஆசிரியர்கள் தமக்கு இதுவரை நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து இன்று வியாழக்கிழமை நுவரெலியாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 2015 ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஆசிரிய உதவியாளர்கள் நியமிக்கப்பட்டார்கள். தங்களுடைய மேற்படிப்பை பூர்த்தி செய்தவுடன்

மேலும்...
கல்முனை மாநகர சபைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்; மொட்டுக்கு ஆதரவளித்ததால் பணி நீக்கம் செய்யப்பட்டதாக புகார்

கல்முனை மாநகர சபைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்; மொட்டுக்கு ஆதரவளித்ததால் பணி நீக்கம் செய்யப்பட்டதாக புகார் 0

🕔21.Aug 2020

– ஏ.எல்.எம். ஷினாஸ்,  நூருல் ஹுதா உமர் –   கல்முனை மாநகர சபையில் இடம்பெறும் அரசியல் பழிவாங்கலுக்கு எதிராக, பொதுமக்கள் சிலர் இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். ஜும்மா தொழுகையை தொடர்ந்து கல்முனை நகர் ஜும்மா பள்ளிவாசல் முன்றலில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. கடந்த பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மொட்டுச் சின்னத்திற்கு

மேலும்...
அறுவடைக்கு தயாராகவுள்ள நெற்பயிர் வெள்ளத்தில்; தீர்வு கேட்டு விவசாயிகள் கல்முனையில் ஆர்ப்பாட்டம்

அறுவடைக்கு தயாராகவுள்ள நெற்பயிர் வெள்ளத்தில்; தீர்வு கேட்டு விவசாயிகள் கல்முனையில் ஆர்ப்பாட்டம் 0

🕔1.Jul 2020

– ஏ.எல்.எம். ஷினாஸ் – கல்முனை பிரதேச செயலகத்துக்கு முன்பாக நேற்று செவ்வாய்கிழமை விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அம்பாறை மாவட்டத்தில் சிறுபோக நெல் அறுவடை மேற்கொள்வதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், மாவட்டத்தின் கல்முனை மற்றும் நற்பிட்டிமுனை பகுதியிலுள்ள சுமார் 13 கண்டங்களிலும் உள்ள வயல் நிலங்களில் நீர் வழிந்தோட முடியாத நிலையில்  நீர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்