ஐந்தாயிரம் தொடர்மாடி வீடுகளை நிர்மாணிக்க, 40 பில்லியன் ரூபா அரசு ஒதுக்கீடு

ஐந்தாயிரம் தொடர்மாடி வீடுகளை நிர்மாணிக்க, 40 பில்லியன் ரூபா அரசு ஒதுக்கீடு 0

🕔31.Dec 2020

– அஸ்ரப் ஏ சமத் – மத்தியதர வருமானம் கொண்ட குடும்பத்தினருக்கும், புதிதாக திருமணம் முடித்து வீடுகளற்ற குடும்பங்களுக்கும் என – கொழும்பு, கண்டி மற்றும் கம்பஹா மாவட்டங்களில் 5,000 தொடா்மாடி வீடுகளை நகர அபிவிருத்தி அதிகார சபை நிர்மாணிக்கவுள்ளது. இவ் வீடுகளை நிர்மாணிக்கவென நகர அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான காணிகளில் உள்ளுர் மற்றும் அரச நிர்மாண நிறுவனங்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளன.

மேலும்...
எச்சரிக்கை; பணப் பரிசு பெற்றுள்ளதாக உங்களுக்கு தகவல் வரலாம்: ஏமாற வேண்டாம் என்கிறார் பொலிஸ் பேச்சாளர்

எச்சரிக்கை; பணப் பரிசு பெற்றுள்ளதாக உங்களுக்கு தகவல் வரலாம்: ஏமாற வேண்டாம் என்கிறார் பொலிஸ் பேச்சாளர் 0

🕔31.Dec 2020

சமூக வலைத்தளங்கள் ஊடாகவோ அல்லது தொலைபேசி அழைப்புகள் வாயிலாகவோ பணப் பரிசு பெற்றுள்ளதாக பொதுமக்களுக்கு வரும் தகவலில் ஏமாந்து விட வேண்டாம் என பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன கேட்டுக் கொண்டுள்ளார். இவ்வாறான தகவலை நம்பி, தகவல் வழங்குவோர் கேட்பதற்கிணங்க பணத்தை அனுப்பி ஏமாந்து விட வேண்டாம் எனவும் அவர் கூறியுள்ளார். இவ்வாறு போலி தகவல்கள்

மேலும்...
உலகில் இல்லாத ஒன்றை நாம் கேட்கவில்லை: கொரோனா உடல்களை அடக்கம் செய்வது குறித்து நீதியமைச்சர் அலி சப்ரி கருத்து

உலகில் இல்லாத ஒன்றை நாம் கேட்கவில்லை: கொரோனா உடல்களை அடக்கம் செய்வது குறித்து நீதியமைச்சர் அலி சப்ரி கருத்து 0

🕔31.Dec 2020

காெரானாவில் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதால் அதன் மூலம் வைரஸ் பரவுவதை விஞ்ஞான ரீதியின் உறுதிப்படுத்தினால் தகனம் செய்யவேண்டும் என தெரிவிப்பவர்களின் நிலைப்பாட்டிலேயே நானும் இருப்பேன் என நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார். ஆனால் தகனம் செய்யவேண்டும் என தெரிவிப்பவர்களின் கருத்தில் எந்த விஞ்ஞான அடிப்படையும் இல்லை. அவர்கள் எடுத்த தீர்மானத்தை கைவிடமுடியாத பிரச்சினையாகவே இருக்கின்றது எனவும்

மேலும்...
பலாத்கார தகனத்துக்கு எதிராக: மன்னாரில் கவனஈர்ப்பு போராட்டம்

பலாத்கார தகனத்துக்கு எதிராக: மன்னாரில் கவனஈர்ப்பு போராட்டம் 0

🕔31.Dec 2020

– எ.எம். றிசாத் – கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போரை பலாத்காரமாக தகனம் செய்வதற்கு எதிராகவும், அவ்வாறான உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்குமாறும் கோரி, மன்னாரில் இன்று வியாழக்கிழமை கவனஈர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது. மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியம் ஏற்பாடு செய்த இந்த கவனஈர்ப்பு போராட்டம், மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றது. வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்

மேலும்...
நபரொவருரை வெட்டிக் கொன்ற சந்தேக நபர்களில் நால்வர், சம்மாந்துறை பொலிஸாரிடம் சரண்

நபரொவருரை வெட்டிக் கொன்ற சந்தேக நபர்களில் நால்வர், சம்மாந்துறை பொலிஸாரிடம் சரண் 0

🕔30.Dec 2020

– பாறுக் ஷிஹான் – முன்விரோதம் காரணமாக இளைஞர் ஒருவரை வெட்டி கொன்ற நிலையில், தலைமறைவாகி இருந்த  நான்கு சந்தேக நபர்கள் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தனர். இன்று (30) முற்பகல் குறித்த சந்தேக நபர்களை தேடி பொலிஸ் குழுக்கள் தேடுதலை மேற்கொண்ட நிலையில், இவர்கள் நால்வரும் சரணடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக

மேலும்...
உக்ரேனில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகளில் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி

உக்ரேனில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகளில் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி 0

🕔30.Dec 2020

உக்ரேனில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா பயணிகளாக வருகை தந்தவர்களில் மூன்று பேர் – கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். உக்ரேனிலிருந்து 185 சுற்றுலாப் பயணிகளுடன் விஷேட விமானமொன்று நேற்று முன்தினம் திங்கட்கிழமை மத்தள விமான நிலையத்தை வந்தடைந்தது. கொவிட்-19 தொற்றுப் பரவல் இலங்கையில் ஏற்பட்ட பின் இலங்கைக்கு சுமார் 09 மாதங்களின் பின்னர் வருகை தந்த முதல்

மேலும்...
யாழ்ப்பாணம் மாநகர சபையின் புதிய மேயராக மணிவண்ணன் தெரிவு: தமிழ் தேசிய கூட்டமைப்பிடமிருந்து சபை பறிபோனது

யாழ்ப்பாணம் மாநகர சபையின் புதிய மேயராக மணிவண்ணன் தெரிவு: தமிழ் தேசிய கூட்டமைப்பிடமிருந்து சபை பறிபோனது 0

🕔30.Dec 2020

யாழ்ப்பாண மாநகர சபையின் புதிய மேயராக இன்று புதன்கிழமை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் போட்டியிட்ட விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் முழுமையான ஆதரவினால் யாழ். மாநகரின் புதிய முதல்வராக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் போட்டியிட்ட மணிவண்ணன் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என, அந்தக் கட்சியின் செயலாளரும் அமைச்சருமான

மேலும்...
குரேஷியாவில் பாரிய நிலநடுக்கம்; 07 பேர் பலி: பாதி நகரம் அழிந்து விட்டதாக பெட்ரீனியா மேயர் தெரிவிப்பு

குரேஷியாவில் பாரிய நிலநடுக்கம்; 07 பேர் பலி: பாதி நகரம் அழிந்து விட்டதாக பெட்ரீனியா மேயர் தெரிவிப்பு 0

🕔30.Dec 2020

ஐரோப்பிய நாடான குரேஷியாவில் நேற்று செவ்வாய்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக குறைந்தது 07 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 20க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. 6.4 என்ற அளவில் அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. நில அதிர்வை கண்டுபிடிக்கும் நவீன இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் குரேஷியாவில் நடக்கும் மிகப் பெரிய நிலநடுக்கம் இது என்று அமெரிக்காவின் புவியியல்

மேலும்...
இலங்கையின் அதிக வயதுடைய பெண் மரணம்

இலங்கையின் அதிக வயதுடைய பெண் மரணம் 0

🕔30.Dec 2020

இலங்கையின் அதிக வயதுடைய பெண் – நேற்று செவ்வாய்கிழமை காலமானார். 1903ஆம் ஆண்டு மே மாதம் 03ஆம் திகதி பிறந்த இவர், மரணிக்கும் போது 117 வயதாகும். வேலு பபானி எனும் பெயருடைய இவர், களுத்துறை மாவட்டத்தின் தொடங்கொட – நெஹின்ன பகுதியைச் சேர்ந்தவாராவர். நேற்று நோயுற்ற நிலையில் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர் –

மேலும்...
நீதியமைச்சர் அலி சப்றி ராஜிநாமா; ஜனாதிபதி ஏற்கவில்லை: ‘த லீடர்’ பரபரப்புச் செய்தி: நடந்தது என்ன?

நீதியமைச்சர் அலி சப்றி ராஜிநாமா; ஜனாதிபதி ஏற்கவில்லை: ‘த லீடர்’ பரபரப்புச் செய்தி: நடந்தது என்ன? 0

🕔29.Dec 2020

நீதியமைச்சர் அலி சப்றி ராஜிநாமா செய்யும் கடிதத்தை ஜனாதிபதிக்கு வழங்கியதாகவும், ஆனால் அதனை ஜனாதிபதி ஏற்றுக் கொள்ளவில்லை எனவும் ‘த லீடர்’ ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கொரோனாவினால் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதற்கான அனுமதியைப் பெறும் நோக்குடன் நீதியமைச்சர் இவ்வாறு செய்திருக்கலாம் என தான் நம்புவதாக அமைச்சர் ஒருவர் தெரிவித்ததாகவும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது. கொரோனாவால்

மேலும்...
கொரோனா உடல்கள் தொடர்ந்தும் தகனம் செய்யப்படும்; முடிவில் மாற்றம் ஏற்பட்டால் அறிவிப்போம்: சுகாதார பணிப்பாளர் நாயகம்

கொரோனா உடல்கள் தொடர்ந்தும் தகனம் செய்யப்படும்; முடிவில் மாற்றம் ஏற்பட்டால் அறிவிப்போம்: சுகாதார பணிப்பாளர் நாயகம் 0

🕔29.Dec 2020

கொவிட் – 19 பாதிப்பினால் மரணிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்ய எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என்று, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டெக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூகத்தில் தவறான தகவல்கள் பரவி வருவதாகக் கூறியுள்ள அவர், கொவிட் காரணமாக மரணிப்பவர்களை தகனம் செய்வதற்கான முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அவர்

மேலும்...
தனிமைப்படுத்தல் சட்டம் அமுலில் உள்ள கல்முனை நகரில், கடைகள் உடைக்கப்பட்டு திருட்டு

தனிமைப்படுத்தல் சட்டம் அமுலில் உள்ள கல்முனை நகரில், கடைகள் உடைக்கப்பட்டு திருட்டு 0

🕔29.Dec 2020

– பாறுக் ஷிஹான் – தனிமைப்படுத்தல் சட்டம்  அமுல்படுத்தப்பட்டுள்ள கல்முனை நகரில் உள்ள  மூன்று கடைகளில் நேற்றிரவு திங்கட்கிழமை திருட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இப்பகுதியில் உள்ள உள்ள 03 வர்த்தக நிலையங்களில் இவ்வாறு களவு இடம்பெற்றுள்ளன. தொலைபேசி விற்பனை நிலையம், தலைக்கவசம் விற்பனை நிலையம் மற்றும் இரும்பு விற்பனை நிலையம் ஆகியவற்றின் பூட்டுக்கள் உடைக்கப்பட்டுள்ளதுடன்  பொருட்களும்

மேலும்...
கட்சி ஆரம்பிக்கப் போவதில்லை; அரசியலுக்கும் வர மாட்டேன்: நடிகர் ரஜினி திடீர் அறிவிப்பு

கட்சி ஆரம்பிக்கப் போவதில்லை; அரசியலுக்கும் வர மாட்டேன்: நடிகர் ரஜினி திடீர் அறிவிப்பு 0

🕔29.Dec 2020

கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வரப்போவதில்லை என்று, இந்திய நடிகர் ரஜினிகாந்த் இன்று செவ்வாய்கிழமை தனது ‘ட்விட்டர்’ பக்கத்தில் அறிவித்துள்ளார். ஜனவரியில் அரசியல் கட்சி தொடங்கப்படும், டிசம்பர் 31ஆம் திகதி அது தொடர்பாக அறிவிக்கப்படும் என்று இம்மாதம் 03ம் திகதி ரஜினிகாந்த் கூறியிருந்த நிலையிலேயே, கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வரப்போவதில்லை என ரஜினி திடீரென அறிவிப்பு விடுத்துள்ளார்.

மேலும்...
பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் போது, மாணவர்களை இரு பிரிவுகளாக அழைக்கத் தீர்மானம்: கல்வி அமைச்சர்

பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் போது, மாணவர்களை இரு பிரிவுகளாக அழைக்கத் தீர்மானம்: கல்வி அமைச்சர் 0

🕔29.Dec 2020

எதிர்வரும் ஜனவரி மாதம் 11 ஆம் திகதி அரச பாடசாலைகளின் ஆரம்ப பிரிவு வகுப்புகளை ஆரம்பிப்பதற்று அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், மாணவர்களை இரண்டு பிரிவுகளாக பாடசாலைகளுக்கு அழைப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றினை நடத்தியபோதே இதனைத்தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்; “மாணவர்கள் மத்தியில் தனிப்பட்ட இடைவெளியை

மேலும்...
தொல்பொருள் திணைக்களத்தின் பணிபாளர் நாயகமாக பேராசிரியர் அனுர மனதுங்க நியமனம்

தொல்பொருள் திணைக்களத்தின் பணிபாளர் நாயகமாக பேராசிரியர் அனுர மனதுங்க நியமனம் 0

🕔29.Dec 2020

தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக பேராசிரியர் அனுர மனதுங்க நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் இந்த நியமனம் அமுலுக்கு வருகிறது. இவர் களனி பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் ஆய்வுப் பிரிவின் சிரேஷ்ட பேராசிரியராகக் கடமையாற்றி வருகின்றார். தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாகக் கடமையாற்றி வரும் பேராசிரியர் செனரத் திஸாநாயக்க எதிர்வரும் முதலாம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்