கொரோனா உடல்கள் தொடர்ந்தும் தகனம் செய்யப்படும்; முடிவில் மாற்றம் ஏற்பட்டால் அறிவிப்போம்: சுகாதார பணிப்பாளர் நாயகம்

🕔 December 29, 2020

கொவிட் – 19 பாதிப்பினால் மரணிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்ய எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என்று, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டெக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சமூகத்தில் தவறான தகவல்கள் பரவி வருவதாகக் கூறியுள்ள அவர், கொவிட் காரணமாக மரணிப்பவர்களை தகனம் செய்வதற்கான முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“கொவிட் காரணமாக மரணிப்போரை எங்கும் அடக்கம் செய்ய நாங்கள் அனுமதி வழங்கவில்லை. கொவிட் காரணமாக மரணித்தால், அந்த உடல் தகனம் செய்யப்பட வேண்டும். இந்த முடிவில் சுகாதார அமைச்சு உறுதியாக உள்ளது” எனவும் அவர் கூறியுள்ளார்.

“கடந்த மார்ச் மாதம் நிபுணர் குழுவை நியமித்து, இந்த முடிவுக்கு நாங்கள் வந்தோம். கூடுதலாக, இந்த விஷயத்தை ஆராய ‘வைராலஜிஸ்ட்’ குழுவொன்றையும் நாங்கள் நியமித்து, அதன் அறிக்கைக்காக காத்திருக்கிறோம். பின்னர் அது குறித்து நாங்கள் கலந்துரையாடுவோம். தற்போதைய முடிவில் மாற்றம் இருந்தால், நாங்கள் பொதுமக்களுக்கு தெரிவிப்போம்”.

அதுவரை கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதே எங்கள் முடிவாகும். அவ்வாறான உடல்கள் விரைவில் தகனம் செய்யப்பட வேண்டும். அந்த முடிவில் சுகாதார அமைச்சிடம் எந்த மாற்றமும் இல்லை” எனவும் அவர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்