புரெவி சூறாவளி ஏற்படுத்திய தாக்கம் குறித்து, அமைச்சர் சமல் நாடாளுமன்றில் விளக்கம்

புரெவி சூறாவளி ஏற்படுத்திய தாக்கம் குறித்து, அமைச்சர் சமல் நாடாளுமன்றில் விளக்கம் 0

🕔3.Dec 2020

புரெவி சூறாவளி காரணமாக ஏற்பட்ட சீரற்ற காலநிலைக்கு மத்தியில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் 4007 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பாதுகாப்பான மத்திய நிலையங்களில் இருப்பதாக இடர் முகாமைத்துவ ராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் அறிவித்தார். நாடு முழுவதிலும் 15 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன என்றும் 170 வீடுகள் ஓரளவுக்கு சேதமடைந்துள்ளதாகவும்

மேலும்...
மாத்தளை மாநகர சபை மேயர் பதவியிருந்து டல்ஜித் அலுவிஹாரே நீக்கம்

மாத்தளை மாநகர சபை மேயர் பதவியிருந்து டல்ஜித் அலுவிஹாரே நீக்கம் 0

🕔3.Dec 2020

மாத்தளை மாநகர சபையின் மேயர் டல்ஜித் அலுவிஹாரே பதவி நீக்கப்பட்டுள்ளார். அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து மத்திய மாகாண ஆளுநனரால் நேற்று புதன்கிழமை வௌியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய அவர் இவ்வாறு பதவி நீக்கப்பட்டுள்ளார். டில்ஜித் அலுவிஹாரேவிற்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கை ஓய்வுபெற்ற மேல்நீதிமன்ற நீதிபதி குசலா

மேலும்...
அக்கரைப்பற்றில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும், ஆயுர்வேத மருந்து வழங்கி வைப்பு

அக்கரைப்பற்றில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும், ஆயுர்வேத மருந்து வழங்கி வைப்பு 0

🕔2.Dec 2020

– றிசாத் ஏ காதர் – கொவிட்-19 தொற்றின் அபாய வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள அக்கறைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதோடு, அதில் பங்கேற்றவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் ஆயுர்வேத மருந்துகளும் இன்று வழங்கி வைக்கப்பட்டன. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர்ஜி. சுகுனணின் அறிவுறுத்தலுக்கு அமைய, தொற்று நோய்

மேலும்...
புரெவி சூறாவளி: இன்றிரவு 07 தொடக்கம் 10 மணி வரைக்கும், கரை தொடும்

புரெவி சூறாவளி: இன்றிரவு 07 தொடக்கம் 10 மணி வரைக்கும், கரை தொடும் 0

🕔2.Dec 2020

புரெவி என பெயரிடப்பட்டுள்ள சூறாவளி திருகோணமலை மற்றும் பருத்தித் துறைக்கிடையிலான முல்லைத்தீவினை அண்மித்த கடற்பரப்பில் இன்று இரவு 07 மணி முதல் 10 வரை – தரை தொடும் என எதிர்பார்த்துள்ளதாக வளிமண்டல வியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு பகுதியில் நிலவிய தாழமுக்கமானது சூறாவளியாக மாற்றமடைந்து, திருகோணமலை கரையிலிருந்து தென்கிழக்காக 330 கிலோமீற்றர்

மேலும்...
கொரோனா தடுப்பு மருந்து: உலகில் முதல் நாடாக பிரிட்டன் அனுமதியளிப்பு

கொரோனா தடுப்பு மருந்து: உலகில் முதல் நாடாக பிரிட்டன் அனுமதியளிப்பு 0

🕔2.Dec 2020

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தின் பரவலான பயன்பாட்டுக்கு பிரிட்டன் அரசு அங்கிகாரம் வழங்கியுள்ளது. பிஃபிசர் மற்றும் பயோஎன்டெக் ஆகிய நிறுவனங்கள் இந்த மருந்தை தயாரித்துள்ளன. இதன் மூலம் பிஃபிசர் மற்றும் பயோஎன்டெக் தயாரித்த இந்தத் தடுப்பூசியின் பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளித்த உலகின் முதல் நாடாக பிரிட்டன் இடம்பிடித்துள்ளது. உடலில் செலுத்தப்பட்ட 95% பேருக்கு கோவிட்-19 தொற்றில்

மேலும்...
ஜனாஸா எரிப்பு விவகாரம்; நீதிமன்ற முடிவு ஏமாற்றமளித்துள்ளது, அரசியல் ரீதியாகவே இனி முயற்சிக்க வேண்டும்: நிஸாம் காரியப்பர்

ஜனாஸா எரிப்பு விவகாரம்; நீதிமன்ற முடிவு ஏமாற்றமளித்துள்ளது, அரசியல் ரீதியாகவே இனி முயற்சிக்க வேண்டும்: நிஸாம் காரியப்பர் 0

🕔1.Dec 2020

– அஸ்லம் எஸ்.மௌலானா – கொவிட்-19 தொற்று நோயினால் மரணிப்பவர்களின் ஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை, மேற்கொண்டு விசாரிப்பதற்கு நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளமை மிகவும் துரதிஷ்டமான ஒரு நிகழ்வாகுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம். நிஸாம் காரியப்பர் கவலை தெரிவித்தார். பிரதம

மேலும்...
அக்கரைப்பற்று ‘உப கொத்தணி’ உருவாக இடமளிக்க வேண்டாம்: கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் லதாகரன் வேண்டுகோள்

அக்கரைப்பற்று ‘உப கொத்தணி’ உருவாக இடமளிக்க வேண்டாம்: கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் லதாகரன் வேண்டுகோள் 0

🕔1.Dec 2020

– கனகராசா சரவணன் – கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்று 235 ஆக அதிகரித்துள்ளது என்றும், அக்கரைப்பற்றில் இன்று வரை 91 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது எனவும் கிழக்கு மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் டொக்டர் அ. லதாகரன் தெரிவித்தார். அதேவேளை அக்கரைப்பற்று ‘ஓர் உப கொத்தணி’யாக உருவாக இடமளிக்க வேண்டாம் எனவும் அவர்

மேலும்...
உரிமை கோரப்படாத ‘கொரோனா பிரேதங்கள்’: இறுதிக் கிரியைகளை அரச செலவில் மேற்கொள்ள தீர்மானம்

உரிமை கோரப்படாத ‘கொரோனா பிரேதங்கள்’: இறுதிக் கிரியைகளை அரச செலவில் மேற்கொள்ள தீர்மானம் 0

🕔1.Dec 2020

கொரோனா தொற்றினால் மரணித்த நிலையில், குடும்பத்தவர்களால் உரிமை கோரப்படாத பிரேதங்களின் இறுதிக் கிரியைகளை அரச செலவில் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் இந்த தகவலைத் தெரிவித்துள்ளார். கொரோனாவால் உயிரிழந்த முஸ்லிம்கள் சிலரின் உடல்களை தகனம் செய்வவதை அவர்களின் குடும்பத்தவர்கள் நிராகரித்துள்ளதோடு, அந்த பிரேதங்களின் தகனக் கிரியைக்காக அவர்களிடம் அரசாங்கம் கோரிய சவப்பெட்டிகளையும்

மேலும்...
சூறாவளி அச்சுறுத்தல்; கிழக்குக்கு அபாயம்:  வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

சூறாவளி அச்சுறுத்தல்; கிழக்குக்கு அபாயம்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை 0

🕔1.Dec 2020

நாட்டில் சூறாவளியொன்று ஏற்படுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது. வங்காள விரிகுடாவில் தென்கிழக்கு பகுதியில் காணப்பட்ட தாழமுக்கம் இன்று காலை 5.30 அளவில் திருகோணமலை கரையிலிருந்து தென்கிழக்காக 530 கிலோமீற்றர் தொலைவில் பதிவாகியுள்ளது. இந்த தாழமுக்கமானது எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் சூறாவளியாக மாற்றமடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த சூறாவளியானது வடமேல் திசையில் பயணித்து நாளை மாலை வேளையில் மட்டக்களப்பு

மேலும்...
ஈரான் அணு விஞ்ஞானி, ரிமோட் மூலம் இயக்கப்படும் ஆயுதங்களால் கொல்லப்பட்டார்: புதிய தகவல்

ஈரான் அணு விஞ்ஞானி, ரிமோட் மூலம் இயக்கப்படும் ஆயுதங்களால் கொல்லப்பட்டார்: புதிய தகவல் 0

🕔1.Dec 2020

ஈரானின் முன்னணி அணு சக்தி விஞ்ஞானியான மொஹ்சென் ஃபக்ரிஸாதேவைச் சுட்டுக் கொலை செய்ய, இஸ்ரேல் மற்றும் நாட்டிலிருந்து வெளியேறிய அரசுக்கு எதிரான குழுவினர், ரிமோட் மூலம் கட்டுப்படுத்தும் ஆயுதத்தை பயன்படுத்தியதாக ஈரான் நம்புகிறது. மொஹ்சென் ஃபக்ரிஸாதே கொலை செய்யப்பட்டதில், இஸ்ரேலின் பங்கு இருக்கிறது என ஈரான் குற்றம்சாட்டுகிறது. ஆனால், இதுவரை இஸ்ரேல் தரப்பில் இருந்து எந்த

மேலும்...
கொரோனாவினால் மரணித்தோரை எரிப்பதற்கு எதிரான மனுக்கள்; விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு

கொரோனாவினால் மரணித்தோரை எரிப்பதற்கு எதிரான மனுக்கள்; விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு 0

🕔1.Dec 2020

கொரொனாவினால் உயிரிழக்கும் நபர்களின் உடல்களை எரிக்கவேண்டுமென வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி, உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களைவிசாரணைக்கு எடுத்துக் கொள்வதில்லை எனத் தெரிவித்து, நீதிமன்றம் நிராகரித்துள்ளது. கொரோனாவினால் இறப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான தெரிவை வழங்காமல் எரிப்பதற்கு எதிராக, கடந்த மே மாதமளவில் உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுக்கள்

மேலும்...
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை மீண்டும் ஒத்தி வைப்பு

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை மீண்டும் ஒத்தி வைப்பு 0

🕔1.Dec 2020

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையை திட்டமிட்ட திகதியில் நடத்த முடியாது என, கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரில் தெரிவித்துள்ளார். புதிய திகதி பரீட்சை நடைபெறுவதற்கு 06 வாரங்களுக்கு முன்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். கொரோனா அச்சம் காரணமாக இவ்வருடம் நடைபெறவிருந்த க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை, 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18ஆம் திகதி

மேலும்...
மஹர சிறைக் கலவரத்தில் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்ற ஒருவர் உயிரிழப்பு

மஹர சிறைக் கலவரத்தில் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்ற ஒருவர் உயிரிழப்பு 0

🕔1.Dec 2020

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தின் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 09 ஆக அதிகரித்துள்ளது. சம்பவத்தில் காயமடைந்து ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் இன்று செவ்வாய்கிழமை உயிரிழந்துள்ளார். இதேவேளை, காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கைதிகளில் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மோதலில் காயமடைந்த 107 பேர் தற்போதைய நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்