கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட இலங்கை தீர்மானம்: விரைவில் சட்டமும் வருகிறது

கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட இலங்கை தீர்மானம்: விரைவில் சட்டமும் வருகிறது 0

🕔30.Nov 2021

கஞ்சா ஏற்றுமதியை விரைவில் சட்டப்பூர்வமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுதேச மருத்துவத்துறை ராஜாங்க அமைச்சர், சட்டத்தரணி சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (30) உரையாற்றும் போதே, அவர் இதனை கூறினார். எதிர்வரும் மாதத்துக்குள் கஞ்சா ஏற்றுமதிக்கு அனுமதி வழங்குவதற்கான சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் ராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார். மருத்துவத் தேவையை அடிப்படையாகக் கொண்டு, கஞ்சா

மேலும்...
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை நிர்வாகத்தை முன்னாள் அத்தியட்சகர் குழப்புவதாக குற்றச்சாட்டு: கூறுபவர்களுக்கு மன அழுத்தம் என்கிறார் டொக்டர் ஜவாஹிர்

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை நிர்வாகத்தை முன்னாள் அத்தியட்சகர் குழப்புவதாக குற்றச்சாட்டு: கூறுபவர்களுக்கு மன அழுத்தம் என்கிறார் டொக்டர் ஜவாஹிர் 0

🕔30.Nov 2021

– பாறுக் ஷிஹான் – வைத்தியர்கர்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சிலரை தம்வசப்படுத்திக் கொண்டு அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை நிர்வாகத்தினை குழப்பும் வேலைகளில், அந்த வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் ஐ.எம். ஜவாஹிர் ஈடுபட்டு வருவதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மட்டக்களப்பு – கல்முனை பிராந்திய உறுப்பினர் டொக்டர் ஏ.எம். சுஹைல் குற்றஞ்சாட்டினார். இவ்விடயத்தில்

மேலும்...
சமையல் எரிவாயு விபத்துக்கள் தொடர்பில் ஆராய விசேட குழு: ஜனாதிபதி நியமிப்பு

சமையல் எரிவாயு விபத்துக்கள் தொடர்பில் ஆராய விசேட குழு: ஜனாதிபதி நியமிப்பு 0

🕔30.Nov 2021

சமையல் எரிவாயு விபத்துக்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு, தீர்வுகளை முன்வைக்க விசேட குழுவொன்றினை ஜனாதிபதி நியமிக்கப்பட்டுள்ளார் என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஷாந்த வல்பலகேவின் தலைமையில் 8 பேரடங்கிய இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குழுவின் ஏனைய உறுப்பினர்களாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், மொரட்டுவ

மேலும்...
கடன் பொறியிலிருந்து இலங்கையை காப்பாற்றியுள்ளோம்:  சீனா அறிவிப்பு

கடன் பொறியிலிருந்து இலங்கையை காப்பாற்றியுள்ளோம்: சீனா அறிவிப்பு 0

🕔30.Nov 2021

மேற்குலக கடன் பொறியில் இருந்து இலங்கையை சீனா காப்பாற்றியதாக கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகைக்கு விட தயாராகிய நேரத்தில் சீனா உதவுவதற்காக முன்வந்து, இலங்கையை கடன் பொறியில் இருந்து காப்பாற்றியது எனவும் சீனத் தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது. சர்வதேச பிணை முறிப்

மேலும்...
மியன்மாரில் இருந்து 20 ஆயிரம் மெட்ரிக் டொன் அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானம்

மியன்மாரில் இருந்து 20 ஆயிரம் மெட்ரிக் டொன் அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானம் 0

🕔30.Nov 2021

மியன்மார் நாட்டிருந்து 20,000 மெட்ரிக் டொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய, அரசாங்கத்திடமிருந்து அரசாங்கத்துக்கு எனும் அடிப்படையின் கீழ், இலங்கை மற்றும் மியன்மார் அரசாங்கங்களுக்கு இடையில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் பிரகாரம் ஒரு மெட்ரிக் டொன் அரிசி 460 அமெரிக்க டொலர்களுக்கு கொள்வனவு செய்யப்படவுள்ளது. இலங்கை அரச வர்த்தக (பல்நோக்கு) கூட்டுத்தாபனத்தினால் இந்தக்

மேலும்...
ஹெரோயினுடன் பெண் உள்ளிட்ட மூவர், நிந்தவூரில் கைது

ஹெரோயினுடன் பெண் உள்ளிட்ட மூவர், நிந்தவூரில் கைது 0

🕔30.Nov 2021

– பாறுக் ஷிஹான் – ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த சந்தேகத்தின் அடிப்படையில்  பெண் உள்ளிட்ட மூவரை நிந்தவூர் பிரதேசத்தில் வைத்து சம்மாந்துறை பொலிஸார் கைது செய்தனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிந்தவூர் தியோட்டர் வீதிக்கு அருகில்  வைத்து, பெண் உட்பட  மூவர்  80 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் நேற்று திங்கட்கிழமை 29) இரவு கைது

மேலும்...
சமையல் எரிவாயு செறிமானங்கள் மாற்றப்பட்டுள்ளன; பகுப்பாய்வு அறிக்கையில் உறுதி: நளின் பண்டார நாடாளுமன்றில் தெரிவிப்பு

சமையல் எரிவாயு செறிமானங்கள் மாற்றப்பட்டுள்ளன; பகுப்பாய்வு அறிக்கையில் உறுதி: நளின் பண்டார நாடாளுமன்றில் தெரிவிப்பு 0

🕔29.Nov 2021

சிலின்டரில் உள்ள மையல் எரிவாயு செறிமானங்கள் மாற்றப்பட்டுள்ளமை கனியவள கூட்டுதாபனத்தின் ரசாயன பகுப்பாய்வு அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார இன்று (29) நாடாளுமன்றில் தெரிவித்தார். பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட எரிவாயு கொள்கலன்களில் பியூட்டேன் மற்றும் ப்ரோப்பேன் என்பன 51:49 என்ற விகிதத்தில் அடங்கியுள்ளமை உறுதியாகியுள்ளது. இது ஒரு பாரதூரமான பிரச்சினை

மேலும்...
பெண்களுக்கான 25 வீதம்: இலக்கை எட்டியுள்ளதா?

பெண்களுக்கான 25 வீதம்: இலக்கை எட்டியுள்ளதா? 0

🕔26.Nov 2021

– யூ.எல். மப்றூக் – இலங்கையின் சனத்தொகையில் சுமார் 52 வீதமானோர் பெண்கள். ஆனாலும், அந்த எண்ணிக்கைக்கேற்ப முக்கியமான துறைகளில் அவர்களுக்கான இடம் வழங்கப்படாத நிலையே காணப்படுகின்றது. குறிப்பாக, அரசியலில் அவர்கள் மிகவும் பின்தங்கியவர்களாகவே உள்ளனர். நாடாளுமன்றம் தொடக்கம் உள்ளுராட்சி சபைகள் வரை பெண்களின் பிரதிநிதித்துவங்கள் மிகவும் அடி மட்டத்திலேயே உள்ளன. இந்த நிலைக்கு பல்வேறு

மேலும்...
கிண்ணியா நகர சபைத் தலைவருக்கு விளக்க மறியல்

கிண்ணியா நகர சபைத் தலைவருக்கு விளக்க மறியல் 0

🕔25.Nov 2021

திருகோணமலை – குறிஞ்சாக்கேணியில் மிதப்பு பாலம் கவிழ்ந்து 06 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைதான கிண்ணியா நகர சபை தவிசாளர் எதிர்வரும் டிசம்பர் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் குறித்த சம்பவம் தொடர்பில் கிண்ணியா நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம். நளீம் இன்று பகல் கைது செய்யப்பட்டு திருகோணமலை நீதிமன்ற நீதவான் பயாஸ்

மேலும்...
மு.கா. தீர்மானத்துக்கு எதிராக நடந்து கொண்ட மூன்று எம்.பிகளின் பதவிகள் பறிப்பு; தௌபீக் எம்.பி விடயத்தில் ஹக்கீம் பக்கச்சார்பு

மு.கா. தீர்மானத்துக்கு எதிராக நடந்து கொண்ட மூன்று எம்.பிகளின் பதவிகள் பறிப்பு; தௌபீக் எம்.பி விடயத்தில் ஹக்கீம் பக்கச்சார்பு 0

🕔24.Nov 2021

வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சியில் வகித்த பதவிகளில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். வரவு – செலவுத் திட்ட வாக்கெடுப்பின் போது, கட்சியின் உச்ச பீடத்தின் தீர்மானத்திற்கமைவாக செயற்படாமையினால் நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம். ஹரீஸ், பைசல் காசிம், ஹாபிஸ் நஸீர் அஹமட் ஆகிய மூவரும் கட்சியில்

மேலும்...
ரசாயன உரம், பீடை கொல்லிகளை இறக்குமதி செய்ய தனியாருக்கு அனுமதி: விவசாய அமைச்சர் தெரிவிப்பு

ரசாயன உரம், பீடை கொல்லிகளை இறக்குமதி செய்ய தனியாருக்கு அனுமதி: விவசாய அமைச்சர் தெரிவிப்பு 0

🕔24.Nov 2021

ரசாயன உரம், பீடை கொல்லிகள் மற்றும் திரவ உரங்களை இறக்குமதி செய்ய தனியார் துறையினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். இன்று (24) முதல் இதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்றிரவு வெளியாகும் எனவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன் ரசாயன உரம், பீடைகொல்லி

மேலும்...
சஹ்ரான் உள்ளிட்டோரை கைது செய்யுமாறு 340 அறிக்கைகளை சமர்ப்பித்ததாக, புலனாய்வு பிரிவு முன்னாள் தலைமை அதிகாரி, நீதிமன்றில் தெரிவிப்பு

சஹ்ரான் உள்ளிட்டோரை கைது செய்யுமாறு 340 அறிக்கைகளை சமர்ப்பித்ததாக, புலனாய்வு பிரிவு முன்னாள் தலைமை அதிகாரி, நீதிமன்றில் தெரிவிப்பு 0

🕔23.Nov 2021

சஹ்ரான் ஹாசிம் உள்ளிட்ட கடும்போக்குவாதிகளை உடனடியாக கைது செய்யுமாறு 2015 ஆம் ஆண்டில் இருந்து 2019 ஆம் ஆண்டு வரை சுமார் 340 அறிக்கைகளை சமர்ப்பித்து கோரிக்கை விடுத்ததாக அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் தலைமை அதிகாரி சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தன இன்று (23) தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தின தாக்குதலை தடுப்பதற்கு

மேலும்...
பிரபாகரன் போதைவஷ்து வியாபாரத்தில் ஈடுபட்டவர்:  ஸ்ரீதரனுடனான வாக்குவாதத்தின் போது டக்ளஸ் தெரிவிப்பு

பிரபாகரன் போதைவஷ்து வியாபாரத்தில் ஈடுபட்டவர்: ஸ்ரீதரனுடனான வாக்குவாதத்தின் போது டக்ளஸ் தெரிவிப்பு 0

🕔23.Nov 2021

– முன்ஸிப் – விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன், போதைவஷ்து வியாபாரத்தில் ஈடுபட்டவர் என்று, ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் இன்று (23) தெரிவித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் உரையாற்றிக் கொண்டிருந்த போது இடைமறித்த டக்ளஸ் தேவானந்தா இதனைக் கூறினார். “பிரபாகரன் போதைவஷ்து

மேலும்...
தௌபீக் எம்.பியின் வீடு மீது தாக்குதல்: கிண்ணியாவில் சம்பவம்

தௌபீக் எம்.பியின் வீடு மீது தாக்குதல்: கிண்ணியாவில் சம்பவம் 0

🕔23.Nov 2021

(படங்கள்: பைஷல் இஸ்மாயில்) கிண்ணியா – குறுஞ்சாக்கேணி ஆற்றை கடப்பதற்காக, மிதவைப் பாலத்தில் பயணித்த போது – இன்று (23) நடந்த விபத்தில் 06 பேர் மரணித்தமையினை அடுத்து ஆத்திரம் கொண்ட பொதுமக்கள், கிண்ணியாவிலுள்ள முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் வீடு மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். சுமார் 45 வருடங்களுக்கு முன்னர் நிர்மாணிக்கப்பட்ட

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க ராஜிநாமா செய்கிறார்

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க ராஜிநாமா செய்கிறார் 0

🕔23.Nov 2021

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க இன்னும் சில தினங்களில் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகவுள்ளதாக அறிவித்துள்ளார். இன்றைய (23) நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். தனது பதவி விலகலை தொடர்ந்து அமெரிக்கா மற்றும் மெக்சிகோவுக்கான இலங்கைத் தூதுவராக பதவியேற்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுன கட்சி

மேலும்...