கொரோனாவால் மரணிப்பவர்களை அடக்கம் செய்யக் கூடாது எனத் தெரிவித்து பிக்குகள் ஆர்ப்பாட்டம்

🕔 December 28, 2020

கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான நிலையில் மரணித்தவர்களை அடக்கம் செய்யக் கூடாது எனத் தெரிவித்து, பௌத்த பிக்குகள் இன்று ஜனாதிபதி செயலகம் அருகே ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

இதன்போது அங்கு வருகை தந்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சியிடம், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிக்குகள் மகஜர் ஒன்றினையும் கையளித்தனர்.

சிங்கள ராவய, ஜாதிகா சன்விதான சம்மேளனய, ஜாதிகா சன்விதான ஏகமுத்துவ மற்றும் சிங்கள அபி உள்ளிட்ட சிங்கள, பௌத்த அமைப்புகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றன.

இதன்போது அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து, பதட்டமான ஏற்பட்டது,

அதன் பின்னர் அங்கு வந்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சியிடம், கொரோனாவால் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய தடை விதிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி,, ஆர்ப்பாட்டக்காரர்கள் மனுவொன்றை கையளித்தனர்.

கொரோனாவால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்யப்படுவதற்கு எதிராக முஸ்லிம்கள் சமூகம் கடும் எரிப்பை வெளியிட்டு வருவதோடு, அவ்வாறு மரணிப்பவர்களை அடக்கம் செய்ய அனுமதிக்குமாறும் முஸ்லிம்கள் கோரிக்கை விடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Comments