இஷாலினிக்கு றிசாட் பதியுதீன் மகள் கொடுத்த 05 ஆயிரம் ரூபா; தர்க்கப்பட்ட வேலைக்காரப் பையன்: முஷாரப் எம்.பி வெளியிட்ட முக்கிய தகவல்கள்

இஷாலினிக்கு றிசாட் பதியுதீன் மகள் கொடுத்த 05 ஆயிரம் ரூபா; தர்க்கப்பட்ட வேலைக்காரப் பையன்: முஷாரப் எம்.பி வெளியிட்ட முக்கிய தகவல்கள் 0

🕔31.Jul 2021

றிசாட் பதியுதீன் வீட்டில் பணியாற்றிய இஷாலினியின் மரணம் தொடர்பான வழக்கில், பொய்யானதும் பிழையானதுமான தகவல்களை நீதிமன்றில் சொலிசிட்டர் ஜெனரல் வழங்கினார் என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எம். முஷாரப் தெரிவித்தார். வியூகம் செய்தித்தளத்தின் ‘பேஸ்புக்’ நேரலை நேர்காணலில் நேற்று வெள்ளிக்கிழமை கலந்து கொண்டு பேசியபோதே அவர் இதனைக் கூறினார். குறித்த நேர்காணலில்

மேலும்...
சரத் வீரசேகர வசமிருந்த இரண்டு திணைக்களங்கள் பறிபோயின: கைவசப் படுத்தினார் கோட்டா

சரத் வீரசேகர வசமிருந்த இரண்டு திணைக்களங்கள் பறிபோயின: கைவசப் படுத்தினார் கோட்டா 0

🕔31.Jul 2021

அமைச்சர் சரத் வீரசேகரவின் பொது பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருந்த 02 திணைக்களங்கள், பாதுகாப்பு அமைச்சின் கீழ் மீளவும் கொண்டுவரப்பட்டுள்ளன. ஜனாதிபதியின் கையொப்பத்துடன் இதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. சிவில் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் பல்நோக்கு அபிவிருத்தி திணைக்களம் ஆகியவை இவ்வாறு ஜனாதிபதியின் அதிகாரத்தின் கீழ் இருக்கும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. அதன்படி,

மேலும்...
தவிசாளர் பதவியில் இருந்து ஜெயசிறில் விலக வேண்டும்: சம்பந்தன், மாவை ஆகியோருக்கு சட்டத்தரணி அன்சில் கடிதம்

தவிசாளர் பதவியில் இருந்து ஜெயசிறில் விலக வேண்டும்: சம்பந்தன், மாவை ஆகியோருக்கு சட்டத்தரணி அன்சில் கடிதம் 0

🕔31.Jul 2021

முகம்மது நபியை நிந்திக்கும் வகையில் முகநூல் பதிவை பகிர்ந்த காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் கே. ஜெயசிறில் என்பவர், தமிழ் – முஸ்லிம் சமூகங்கள் சௌஜன்யத்தோடு வாழ்கின்ற பிரதேச சபையொன்றின் தவிசாளராக பதவி வகிப்பதற்குரிய தார்மீக உரிமையை இழந்துள்ளதாகவும், பிரதேச சபையின் தவிசாளர் பதவியிலிருந்து அவர் ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் தெரிவித்து, தமிழ் தேசியக்

மேலும்...
பிரபல நடிகை விபத்தில் பலி: 300 அடி பள்ளத்தில் வாகனம் வீழ்ந்தது

பிரபல நடிகை விபத்தில் பலி: 300 அடி பள்ளத்தில் வாகனம் வீழ்ந்தது 0

🕔31.Jul 2021

– க. கிஷாந்தன் – பிரபல சிங்கள திரைப்பட நடிகை ஹயசிந்த் விஜயரத்ன (வயது 75) – வாகன விபத்தொன்றில் சிக்கி இன்று சனிக்கிழமை காலை உயிரிழந்தார். லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா – தலவாக்கலை பிரதான வீதியில் லிந்துலை நகரத்துக்கு அருகாமையில் இன்று அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி இவர் மரணமடைந்தார்.

மேலும்...
காரைதீவு தவிசாளர் ஜெயசிறிலுக்கு எதிராக குவியும் பொலிஸ் முறைப்பாடு: முகம்மது நபியை அவதூறு செய்ததன் விளைவு

காரைதீவு தவிசாளர் ஜெயசிறிலுக்கு எதிராக குவியும் பொலிஸ் முறைப்பாடு: முகம்மது நபியை அவதூறு செய்ததன் விளைவு 0

🕔31.Jul 2021

– நூருல் ஹுதா உமர் – முகம்மது நபியை இழிவாக எழுதிய பேஸ்புக் பதிவை பகிர்ந்த காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறிலுக்கு எதிராக பலபொலிஸ் நிலையங்களிலும் முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் காரைதீவு பிரதேச சபை முஸ்லிம் உறுப்பினர்கள், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசியல் செயற்பாட்டாளர் எம்

மேலும்...
றிசாட் பதிதீனும் இஷாலினியும்: அவதூறுகள், கட்டுக் கதைகள், அவற்றுக்கு அப்பாலுள்ள உண்மைகள்

றிசாட் பதிதீனும் இஷாலினியும்: அவதூறுகள், கட்டுக் கதைகள், அவற்றுக்கு அப்பாலுள்ள உண்மைகள் 0

🕔30.Jul 2021

– மரைக்கார் – முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் வீட்டில் பணியாற்றிய பெண் பிள்ளையொருவர் தீக் காயங்களுக்குள்ளான நிலையில் மரணமடைந்த விடயமானது, ‘கண்டவர்களெல்லாம் கம்பெடுத்து வேட்டைக்காரர்களாகும் விவகாரமாக’ மாறியுள்ளமையை அவதானிக்க முடிகிறது. றிசாட் பதியுதீன் வீட்டில் மலையகத்தைச் சேர்ந்த இஷாலினி எனும் பெண் பிள்ளையொருவர் பணியாற்றி வந்த நிலையில் மரணமடைந்தார். இது விடயத்தில் பல்வேறு தகவல்கள்,

மேலும்...
முகம்மது நபியை இழிவாக எழுதி ‘பேஸ்புக் பதிவு: காரைதீவு பிரதேச சபைத் தவிசாளருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு

முகம்மது நபியை இழிவாக எழுதி ‘பேஸ்புக் பதிவு: காரைதீவு பிரதேச சபைத் தவிசாளருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு 0

🕔30.Jul 2021

– மரைக்கார் – முகம்மது நபியவர்களை இழிவாக எழுதியமையை தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் பகிர்ந்த காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் கிருஷ்ணப்பிள்ளை ஜெயசிறில் என்பவருக்கு எதிராக, சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. காரைதீவு பிரதேச சபையின் உப தவிசாளர் ஏ.எம். ஜாஹிர் மற்றும் காரைதீவு பிரதேச சபையின் உறுப்பினர்களான எம்.எச்.எம். இஸ்மாயில், ஏ.ஆர்.எம். பஸ்மீர்,

மேலும்...
41 கிலோகிராம் ஹெரோயின் இன்று காலை சிக்கியது: சந்தேக நபர் துபாயில் உள்ளார் எனத் தகவல்

41 கிலோகிராம் ஹெரோயின் இன்று காலை சிக்கியது: சந்தேக நபர் துபாயில் உள்ளார் எனத் தகவல் 0

🕔30.Jul 2021

பெருந்தொகையான ஹெரோயின் போதைப் பொருள் இன்று வெள்ளிக்கிழமை காலை பண்டாரகம பிரதேசத்தில் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன் பின்னணியில் இலங்கையிலிருந்து துபாய்க்கு தப்பிச் சென்ற நபர் ஒருவர் உள்ளார் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. தகவல் ஒன்றின் அடிப்படையில் பண்டாரகம – ரெணுகாவ பகுதியில் களுத்துறை பொலிஸார் இன்று காலை மேற்கொண்ட நடவடிக்கையின்போது, 41 கிலோகிராம் ஹெரோயின்

மேலும்...
அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க கலந்துரையாடல் ஆரம்பம்: அமைச்சரவைக்கு பசில் அறிவிப்பு

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க கலந்துரையாடல் ஆரம்பம்: அமைச்சரவைக்கு பசில் அறிவிப்பு 0

🕔30.Jul 2021

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு வழங்க வரவு செலவு திட்டத்தில் அவதானம் செலுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி கேட்டாபய ராஜபக்ஷ தலைவமை சூம் தொழில்நுட்பத்தில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர், அதிபர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை இணக்கம் வெளியிட்ட போதிலும் இது தொடர்பில் ஆசிரியர் சங்கத்துடன் விசேட கலந்துரையாடல்

மேலும்...
முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்த்தனவை, 08 லஞ்ச ஊழல் வழக்குகளிலிருந்து விடுவித்து, நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்த்தனவை, 08 லஞ்ச ஊழல் வழக்குகளிலிருந்து விடுவித்து, நீதிமன்றம் உத்தரவு 0

🕔30.Jul 2021

லஞ்ச ஊழல் திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்ட 08 வழக்குகளிலிருந்து முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த 08 வழக்குகளில் இருந்தும் அவரை விடுதலை செய்ய கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று (30) கொழும்பு பிரதான நீதவான் புத்திக சி. ராகல முன்னிலையில் விசாரணைக்கு

மேலும்...
சஹ்ரானின் சகோதரி உள்ளிட்ட 62 பேருக்கு தொடர்ந்தும் விளக்க மறியல்

சஹ்ரானின் சகோதரி உள்ளிட்ட 62 பேருக்கு தொடர்ந்தும் விளக்க மறியல் 0

🕔29.Jul 2021

ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி சஹ்ரானின் சகோதரி, சியோன் தேவாலய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் உட்பட வெவ்வேறு 04 வழக்குகளில்சந்தேக நபர்களாகப் பெயரிடப்பட்டுள்ள 62 பேரையும் எதிர்வரும் 05 திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு காணொளி மூலம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் சஹ்ரான் குழுவோடு தொடர்புடையவர்கள் என்றும், ஹம்பாந்தோட்டை மற்றும்

மேலும்...
நீல மாணிக்கல் கொத்தை, சீனாவில் ஏலமிட எதிர்பார்ப்பு: அமைச்சர் லொஹான் ரத்வத்த

நீல மாணிக்கல் கொத்தை, சீனாவில் ஏலமிட எதிர்பார்ப்பு: அமைச்சர் லொஹான் ரத்வத்த 0

🕔29.Jul 2021

ரத்தினபுரி பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய மாணிக்க கல் கொத்தை வெளிநாட்டில் ஏலமிட திட்டமிடப்பட்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார். அதற்காக விசேட விமானம் ஒன்றை ஏற்பாடு செய்யுமாறும், தீவிர பாதுகாப்பு வழங்குமாறும், முழு அரச தலையீட்டை வழங்க முடியும் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார் எனவும் ராஜங்க அமைச்சர் கூறியுள்ளார். இதேவேளை

மேலும்...
இலங்கையில் சிறுவர் ஆபாச வீடியோ மற்றும் படங்கள்; ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 18 ஆயிரம் வெளியீடு: கண்காணிக்க சிறப்பு பிரிவு

இலங்கையில் சிறுவர் ஆபாச வீடியோ மற்றும் படங்கள்; ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 18 ஆயிரம் வெளியீடு: கண்காணிக்க சிறப்பு பிரிவு 0

🕔29.Jul 2021

இலங்கையில் சிறுவர்களின் ஆபாச வீடியோகள் மற்றும் ஆபாச புகைப்படங்கள் என கடந்த ஜுன் 27ஆம் திகதி தொடக்கம் இம்மாதம் ஜுலை 28ஆம் திகதி வரையிலான ஒரு மாதத்தில் மட்டும் மொத்தமாக 17,629 வகையானவை இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். கணினி, மடிக்கணினி, கைபேசிகள்

மேலும்...
கொத்தலாவல சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இணைய வழி விரிவுரைகளில் இருந்து பல்கலைக்கழக ஆசிரியர்கள் விலகல்

கொத்தலாவல சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இணைய வழி விரிவுரைகளில் இருந்து பல்கலைக்கழக ஆசிரியர்கள் விலகல் 0

🕔28.Jul 2021

சர்ச்சைக்குரிய கொத்தலாவல சட்டமூலத்தை எதிர்த்து பல்கலைக்கழக ஆசிரியர்கள் இன்று (28) இணையக் கற்பித்தல் நடவடிக்கைகளில் இருந்து விலகியுள்ளனர். பல்கலைக்கழக ஆசிரியர்கள் இன்று முதல் இணைய வழி விரிவுரைகளை நடத்துவதிலிருந்து தவிர்ந்து கொள்வார்கள் என, பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (FUTA) தெரிவித்துள்ளது. இலவச கல்வியை தனியார் மயமாக்கும் கொத்தலாவல சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பொருட்டு, இந்தப்

மேலும்...
உக்காத ‘லஞ்ச் சீற்’ வகைகளுக்கு 01ஆம் திகதி முதல் தடை: சுற்றாடல் துறை அமைச்சர் அறிவிப்பு

உக்காத ‘லஞ்ச் சீற்’ வகைகளுக்கு 01ஆம் திகதி முதல் தடை: சுற்றாடல் துறை அமைச்சர் அறிவிப்பு 0

🕔28.Jul 2021

உக்காத ‘லன்ச் சீற்’ வகைகளுக்கு தடை விதிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக சுற்றாடல் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார் எதிர்வரும் ஓகஸ்ட் 01ஆம் திகதி தொடக்கம் இந்தத் தடை அமுலுக்கு வரவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார். அந்த வகையில் உக்காத ‘லன்ச் சீற்’

மேலும்...