வைத்தியசாலையில் இருந்து றிசாட் அழைத்துச் செல்லப்பட்டார்

வைத்தியசாலையில் இருந்து றிசாட் அழைத்துச் செல்லப்பட்டார் 0

🕔24.Jul 2021

கொழும்பு தேசிய வைத்தியாலையில் சிகிச்சை பெற்று வந்த மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் மீண்டும் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு இன்று அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 17 ஆம் திகதி திடீர் உடல் நலக் குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது சிகிச்சைகள் நிறைவடைந்த நிலையில் அவர் வைத்தியசாலையில்

மேலும்...
“மைத்திரிதான் பதில் சொல்ல வேண்டும்”: ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு நிமல் பதில்

“மைத்திரிதான் பதில் சொல்ல வேண்டும்”: ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு நிமல் பதில் 0

🕔24.Jul 2021

அரசாங்கத்தை விட்டும் வெளியேறுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிடம் யாரும் கூறவில்லை என, அந்தக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு பேசும் போது அவர் இதனைக் கூறினார். அரசாங்கத்தின் உள்ளகப் பிரச்சினைகள் தொடர்பில் பேசுவதற்குரிய பொருத்தமான நேரம் இதுவல்ல எனவும் அவர்

மேலும்...
றிசாட் பதியுதீனின் மனைவி, மாமனார் உள்ளிட்டோரை தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

றிசாட் பதியுதீனின் மனைவி, மாமனார் உள்ளிட்டோரை தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி 0

🕔24.Jul 2021

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீனின் மனைவி, மாமனார் மற்றும் தரகர் ஆகியோரை 48 மணி நேரம் தடுப்புக் காவலில் வைத்து விசாரிப்பதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளது. விசாரித்த பின்னர் நாளை மறுநாள் 26 ஆம் திகதி அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மனித

மேலும்...
றிசாட் பதியுதீனின் மனைவி, மாமனார் உள்ளிட்ட மூவர் கைது

றிசாட் பதியுதீனின் மனைவி, மாமனார் உள்ளிட்ட மூவர் கைது 0

🕔23.Jul 2021

சிறுமியை வீட்டு வேலைக்கு அமர்த்திய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். றிசாட் பதியுதீனின் மனைவி சஹாப்தீன் ஆயிஷா மற்றும் மனைவியின் தந்தை முகம்மட் சஹாப்தீன் (70 வயது) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, சிறுமியை கொழும்புக்கு அழைத்து வந்து றிசாட்

மேலும்...
முஸ்லிம் சமய கலாசார திணைக்களப் பணிப்பாளர் பதவியில் இருந்து அஷ்ரப் நீக்கம்

முஸ்லிம் சமய கலாசார திணைக்களப் பணிப்பாளர் பதவியில் இருந்து அஷ்ரப் நீக்கம் 0

🕔22.Jul 2021

– எம்.எஸ்.எம். ஸாகிர் – முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எ.பி.எம். அஷ்ரப், இன்று (22) திடீரென அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். சுமார் இரண்டு வருடங்களுக்கு மேலாக இப்பதவியை வகித்த அஷ்ரபின் இடத்துக்கு திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் அன்வர் அலி பதில் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். வக்ஃப் சபையின் தீர்மானத்தை, வக்ஃப் சபையின் சட்டப்படி அறிவிக்கின்ற

மேலும்...
சிறுவர் தொடர்பான ஒன்பது நீதிமன்றங்களை நிறுவ தீர்மானம்

சிறுவர் தொடர்பான ஒன்பது நீதிமன்றங்களை நிறுவ தீர்மானம் 0

🕔22.Jul 2021

சிறுவர்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் வகையிலான 09 நீதிமன்றங்களை நாட்டின் ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கிய வகையில் அமைப்பதற்கு நிறுவ மகளிர் மற்றும் சிறுவர் மேம்பாடு, பாலர் மற்றும் ஆரம்ப கல்வி, பாடசாலை உட்கட்டமைப்பு மற்றும் கல்வி சேவைகள் ராஜாங்க அமைச்சு தீர்மானித்துள்ளது. சிறுவர்களின் உடல், உள மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகளின் விசாரணைகளை விரைவுபடுத்துவதே

மேலும்...
இந்திய துணைத் தூதுவர் பாலச்சந்திரன், இலங்கையிலிருந்து விடைபெறுகிறார்

இந்திய துணைத் தூதுவர் பாலச்சந்திரன், இலங்கையிலிருந்து விடைபெறுகிறார் 0

🕔22.Jul 2021

– முன்ஸிப் அஹமட் – இலங்கைக்கான இந்தியத் துணைத் தூதுவராகக் கடமையாற்றி வந்த எஸ். பாலச்சந்திரன், அந்தப் பதவியிலிருந்து விடை பெற்றுச் செல்வதாக அறிவித்துள்ளார். இவர் கடந்த மூன்றரை ஆண்டுகளாக வட மாகாணத்தில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதுவராலயத்தில் துணைத் தூதுவராகக் கடமையாற்றி வந்தார். எஸ். பாலசந்திரன் வகித்து வந்த மேற்படி இந்தியத் துணைத் தூதுவர்

மேலும்...
போதைப் பொருள் வர்த்தகர்களிடம் லஞ்சம் பெற முயற்சித்த ராணுவத்தினர் மூவர் கைது

போதைப் பொருள் வர்த்தகர்களிடம் லஞ்சம் பெற முயற்சித்த ராணுவத்தினர் மூவர் கைது 0

🕔22.Jul 2021

லஞ்சம் பெற முயன்ற ராணுவத்தினர் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. போதைப்பொருள் வர்த்தகத்தை தொடர்வதற்காக சிலாபம் மற்றும் சீதுவை பகுதிகளில் இரண்டு பேரிடம் மேற்படி ராணுவத்தினர் லஞ்சம் பெற்றுள்ளனர். இதன்படி, சிலாபம் – மையக்குளம் பகுதியில் கஞ்சா மற்றும் ஹெரோயின் போதைப்பொருளை விற்பனை செய்து வந்த பெண் ஒருவரிடம்

மேலும்...
கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி: முஸ்லிம் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் ‘பல்டி’

கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி: முஸ்லிம் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் ‘பல்டி’ 0

🕔20.Jul 2021

எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 91 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்ட இந்தப் பிரேரணை மீதான விவாதம் நேற்றும், இன்றும் இடம்பெற்றது. பிரேரணை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட திருத்த கோரிக்கை சபாநாயகரால் நிராகரிக்கப்பட்டது.

மேலும்...
றிசாட் வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்ட பிள்ளையின் மரணம்: ஒவ்வொரு தரப்பும் கூறுவதென்ன?

றிசாட் வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்ட பிள்ளையின் மரணம்: ஒவ்வொரு தரப்பும் கூறுவதென்ன? 0

🕔20.Jul 2021

– லோரான்ஸ் செல்வநாயகம் – நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீனின் கொழும்பு வீட்டில் வேலை செய்த ஹற்றன் – டயகம சிறுமியின் மரணம் தொடர்பில் நடத்தப்பட்டு வரும் விசாரணைகளில், அவசியம் ஏற்படுமிடத்து, தற்போது குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பொறுப்பிலுள்ள முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனிடமும் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்படுமென விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். முன்னாள்

மேலும்...
எரிசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை: ரணிலின் திருத்தத்தை சபாநாயகர் நிராகரித்தார்

எரிசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை: ரணிலின் திருத்தத்தை சபாநாயகர் நிராகரித்தார் 0

🕔20.Jul 2021

எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க நேற்று முன்வைத்திருந்த திருத்தம் ஏற்றுக்கொள்ள முடியாததொன்று என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அதனை நிராகரித்துள்ளார். இன்றைய தினம் நாடாளுமன்ற நடவடிக்கைகளை ஆரம்பமாகிய வேளையில் சபாநாயகர் இதனை அறிவித்திருந்தார்.

மேலும்...
சமையல் எரிவாயு விலையில் மாற்றம்: அமைச்சரவை அனுமதி

சமையல் எரிவாயு விலையில் மாற்றம்: அமைச்சரவை அனுமதி 0

🕔20.Jul 2021

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 18 லீற்றர் கொண்ட சமையல் எரிவாயு கொள்கலனைச் சந்தையில் விற்பனை செய்வதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. இந்த கொள்கலனின் விலை 1,150 ரூபாவாக நிர்ணயிக்கப்படுவதற்கும் அமைச்சரவை நேற்று தீர்மானித்துள்ளது. அத்துடன் குறித்த 18 லீற்றர் எரிவாயு கொண்ட கொள்கலனின் அடைக்கப்பட்டுள்ள எரிவாயுவின் நிறையும் எதிர்காலத்தில் குறிப்பிடப்பட வேண்டும். வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத்

மேலும்...
ஒரு கிலோ கஞ்சாவுடன் காரைதீவு சந்திப் பகுதியில் கல்முனை நபர் கைது

ஒரு கிலோ கஞ்சாவுடன் காரைதீவு சந்திப் பகுதியில் கல்முனை நபர் கைது 0

🕔19.Jul 2021

கேரளா கஞ்சாவினை முச்சக்கரவண்டியில் கடத்தி சென்றவரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் – காரைதீவு சந்திப் பகுதியில் இன்று (19) மதியம் கல்முனை பொலிஸ் விசேட பிரிவின் தகவலுக்கமைய இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முச்சக்கரவண்டி சந்தேகத்திற்கிடமான முறையில் உலவுவதாகக் கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, காரைதீவு சந்திக்கு அருகில்   சம்மாந்துறை பொலிஸார் தேடுதல் நடத்தியபோது

மேலும்...
ஐந்து லட்சம் ரூபா பெறுமதியான வைத்திய உபகரணங்கள்: ‘வில் கிளப்’ அன்பளிப்பு

ஐந்து லட்சம் ரூபா பெறுமதியான வைத்திய உபகரணங்கள்: ‘வில் கிளப்’ அன்பளிப்பு 0

🕔19.Jul 2021

கொவிட் தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளின் சிகிச்சைக்காகவும், பாதுகாப்புக்காகவும் பயன்படுத்தும் வகையிலான ஒரு தொகுதி வைத்திய உபகரணங்கள், ஆலையடிவேம்பு சுகாதாரப் பணிமனை மற்றும் அக்கரைப்பற்று மாவட்ட வைத்தியசாலை ஆகியவற்றுக்கு இன்று திங்கட்கிழமை அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டன. அம்பாரை மாவட்ட உள்ளூராட்சி சபை பெண் உறுப்பினர்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்ட ‘வில் கிளப்’ (WILL club) இந்த உபகரணங்களை

மேலும்...
ஜனாதிபதித் தேர்தலில் அடுத்த முறையும் போட்டியிட கோட்டா விருப்பம்

ஜனாதிபதித் தேர்தலில் அடுத்த முறையும் போட்டியிட கோட்டா விருப்பம் 0

🕔19.Jul 2021

கோட்டபய ராஜபக்ஷ இரண்டாவது முறையாகவும் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் விருப்பம் வெளிப்படுத்தியுள்ளார். அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் இரண்டாவது முறையாகவும் போட்டியிடத் தயாராக இருப்பதை ஜனாதிபதி இன்று உறுதிப்படுத்தினார். மேலும் மூன்று ஆண்டுகளுக்கு மேலதிகமாக, தனது கொள்கைகளை செயல்படுத்த இன்னும் ஐந்து ஆண்டுகள் உள்ளதாக ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்களுடன் நடைபெற்ற கூட்டத்தின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்